மண்ணின் மைந்தன் கவிஞர் இரா ஜெயக்குமார் அவர்களின் கவிதை நூல் வெளியீடு பற்றிய காணொளி. updated 07/05/2017

 


கவிஞர் இரா ஜெயக்குமார் அவர்களின் அநுபவங்களும் அநுமானங்களும் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா உரும்பிராய் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பகாக இடம்பெற்றது.

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை கற்ற திரு ஜெயக்குமார் அவர்கள் சிறுவயது முதல் கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். முதன் முதலாக மல்லிகை என்னும் கையெளுத்து சஞ்சிகையை வெளியிட்டார். எமது கிராமத்தில் கலை இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு கணிசமாக இருந்தது. குப்பிழான் கலை இலக்கிய மன்றத்தால் இனிய உதயம் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. அந்த சஞ்சிகையை வெளியிடுவதில் அவரின் பங்கு அளப்பரியது. அன்றைய கால கட்டத்தில் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிடுவதே மிக சிரமமாக இருந்தது. காரணம் அதன் செலவு, பொருளாதார பலமில்லாத அந்த கால கட்டத்தில் ஒரு சஞ்சிகையை வெளியிடுவது என்பது இலகுவானதல்ல அப்படி இருந்தும் திரு ஜெயக்குமார் போன்ற இளைஞர்களின் பங்களிப்போடு பல சஞ்சிகைகள் வெளியிடப்பட்டது.

திரு இரா ஜெயக்குமார் குப்பிழானை பிறப்பிடமாக கொண்டவர் நாட்டில் ஏற்பட்ட கடுமையான போர் அவரை உரும்பிராய் வாசியாக்கிவிட்டது.

இயல்பாகவே கல்வி நாட்டம் உடையவர் தளரா முயற்சியாளர். அவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற ஆசிரியராகவும் பட்டதாரியாகி பாடசாலை அதிபராகவும் திகழ்கின்றார்.

Part1

 

 

Part 2