சிறப்பாக இடம்பெற்ற சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2017. updated 23-06-2017

குப்பிழான் மத்தியிலிருந்து அருள்பாலித்துக் கொண்டு இருப்பவர் சோதி விநாயகன். ஒவ்வொரு ஆனி மாதமும் ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. தற்போது ஆலய கோபுர வேலைகள் நடைபெற்று வருகின்றது. அப்படி இருந்தும் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஆலய திருவிழாவை முன்னிட்டு வெளிநாட்டு வாழ் பக்தர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்டு சிறபபித்தனர்.


12-06-2017 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலையும் மாலையும் திருவிழாக்கள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றது. சப்பர திருவிழாவன்று எம்பெருமான் மின் விழக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் பவனி வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

 

23-06-2017 திங்கட்கிழமை இரதோற்சவ நிகழ்வு இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணியளவில் திருப்பள்ளி பூசையுடன் ஆரம்பமானது அன்றைய நிகழ்வு, தம்ப பூஜையை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. அதன் பின்னர் எம்பெருமான் அடியார்களின் தோழ்களில் ஆடி அசைந்து வர, பூமாரி பொழிந்த அந்த அற்புத காட்சி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. சைவப்புலவர் கந்த சத்தியதாசன் அவர்கள் நேரடி வர்ணனை செய்ய எம்பெருமான் அழகிய தேரில் ஏறி வெளிவீதியில் பவனிவர அடியார்கள் அங்க பிரதட்சனம், கற்புர சட்டி எடுத்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தேர் பவனி நிறைவடைந்ததும் அடியார்கள் அர்ச்சனைகள் செய்தனர். மாலை 3 மணியளவில் எம்பெருமான் தேரிலிருந்து இறங்கி தமது இருப்பிடம் நோக்கி மெல்ல நகர்ந்தார். அபிசேக அராதனைகளோடு தேர்த்திருவிழா இனிது நிறைவு பெற்றது.

அமரர் காசிப்பிள்ளை இராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் அடியார்களுக்கு 12 நாட்களும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.