யாழ்.குப்பிளான் கற்கரைக்கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் எதிர்வரும் 12 ஆம் திகதி. updated 06-06-2015யாழ்.குப்பிளான் மண்ணின் காவல் தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்கி நாடித் துதி செய்ய வரும் அடியவர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அருள் சுரக்கும் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(12.6.2015) சிறப்பாக நடைபெறவுள்ளது.


பாலஸ்தாபன கும்பாபிஷேகத்துக்கான கர்மராம்பம் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகும். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு பேரசலனம் (சுவாமி எடுத்தல்) நிகழ்வும் மறுநாள் 12 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்குக் கிரியைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்குப் பாலஸ்தாபன கும்பாபிஷேகமும் நடைபெறும்.


பாலஸ்தாபன பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ கி.வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெறும்.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.