குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணி வேலைகளும் அடியார்களின் பங்களிப்பும்.


குப்பிழான் மக்களின் குல தெய்வமான கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணிகள் அடியார்களின் அளப்பெரிய பங்களிப்பினால் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பல திருப்பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் அடியார்களின் பங்களிப்பை தொடர்ந்து எதிர்பார்க்கின்றார்கள். எமது கிராமம் போர் வலயத்தின் எல்லை கிராமம் ஆகும். எமது கிராமத்தில் பெரும் உயிர் இழப்புக்கள் ஏற்படாமல் காத்த காவல் தெய்வம் கற்கரையான். நாம் எல்லோரும் வெளிநாடு செல்லும் போது பிள்ளையாரே ஒரு பிரச்சினை இல்லாமல் போய் சேர வேண்டும் என்று சொல்லிப் போட்டு தான் நிட்சயம் வந்திருப்போம். ஆகவே எமது உயிரை காத்து எங்களை நல்லபடியாக வாழ வைத்த எமது குல தெய்வத்துக்கு எம்மலான உதவிகளை வழங்குவோமாக.


 

 

 

படங்கள்
சி.திசாந்தன்.