குப்பிழான் கௌரி அம்பாள் ஆலய 6ம் திருவிழாவும் புதிய தேர் வெள்ளோட்டமும். updated 29-04-2015

 

குப்பிளான் கன்னிமார் கௌரி அம்பாள் சன்னிதானத்திலே காலை ஏழு மணிக்கு எம்பெருமாட்டிக்கு பால், பழம் , தயிர் போன்ற குளிர் பதார்த்தங்களால் அபிஷேகம் செய்யபட்டு யாக சாலை கிரியைகள் இடம்பெற்று அதன் பின்னர் ஸ்தம்ப பூயை நடைபெற்று வசந்த மண்டப பூயைகள் உட்பட பஞ்ச புராணம் ஓத பட்டு, கன்னிமார் கௌரி அம்பாள் தக தக பார்ப்போர் கண்களை எல்லாம் பறிக்கும் வண்ணம் பொன் ஆபரணங்கள் உடன் உண்மையிலே மணவறையில் பிரகாசிக்கும் மணமகள் போன்று வீதி வலம் வந்து அருள் பாலித்து இருக்கையில் அமர்ந்தாள்.


அடுத்ததாக சித்திர தேர் சிற்றபாச்சாரியார்கள் ,வர்ண கலைஞர்கள் , ஆச்சாரியார் ,கலை சிற்பிகள் , சித்திர தேர் உபயகாரர்கள், பிரதம குருக்கள், நிர்வாக சபை என்றவாறு தேரடி கிரியைகள் இடம்பெற்று தேர் கலசம், வைரவர் சூலம் உட்பட உபயகாரர்களினால் வலம் கொண்டுவரப்பட்டு தேரில் ஏற்றப்பட்டது .... அதன் பின் அச்சாணி இன்றி தேர் முச்சாணும் ஓடாது என்பதற்கிணங்க அச்சாணிக்குரிய முக்கியத்துவங்கள் கொடுக்க பட்டு சில்லிலே பொருத்த பட்டது .அதன் பின்னர் அந்தணர் விண்ணெல்லாம் முழங்க வேதம் ஓத அடியவர்கள் வடம் பிடிக்க தவில் நாதஸ்வர குழுவினர் கான மழை பொழிய வீரமனை வீறுகொண்டெழுந்து விழா கோலம் கண்டது. ஆரோஹாரா கோஷம் விண்ணை தொட்டது. சித்திர தேர் இல் மணி ஓசைகள் கணீர் கணீர் என்று ஆர்பரிர்த்தன ......தேர் சில்லுகள் சிரித்த வண்ணம் சுழன்றன. வெற்றிகரமாக தேர் இருப்பிடத்தை அடைந்தது. இறுதியில் தேர் தரிப்பிட கட்டிட கலைஞர்கள், தேர் கலைஞர்கள், வர்ண கலைஞர்கள், சிற்பிகள் அனைவரும் ஆலய நிர்வாகத்தினராலும் ,தேர் உபயகாரர்களினாலும் கௌரவிக்கபட்டனர்.


சிவ தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அவர்களின் ஆசி உரையும் இடம்பெற்றது. அதில் அவர் ஆலயத்தின் வளர்ச்சி பற்றி மிகவும் பெருமையடைந்தார் ...சிறு மாணவர்கள் அறநெறி மற்றும் சங்கீத இசை கருவிகள் போன்றவற்றிலும் திகழ வேண்டும் எனவும் ஆலய தலைவர் இந்த விடயங்களில் ஊக்கம் கொண்டவர், அதற்கு பிள்ளைகளும்,பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார். எமது ஊரிலே மட்டும் தான் தேவாரம் ஓதுவதற்கு பஞ்சமில்லை .......அவளவு திறமையும் முக்கியத்துவமும் சைவத்தில் எம் மக்களுக்கு உண்டு. வெளி ஊர்களில் கோயில்களில் சம்பளத்திற்கு தேவாரம் ஓத வெளி நபர்கள் நியமிக்க படுவதாகவும்,,,,எம் பிள்ளைகளின் திறமையும் நாவன்மையையும் போற்றி புகழ்ந்தார்....இனிவரும் சமுதாயங்களும் இதை பின் பற்ற வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டினார்.அதை தொடர்ந்து அன்னதானம் இடம் பெற்று அடியவர் இல்லம் திரும்பினர் . நாளை மாலை அம்பாள் வேட்டையாடுவதற்கு வீறு கொண்டு சொக்கர்வளவு சோதி விநாயகருக்கு செல்ல உள்ளார் . அடியவர்கள் வீதி எங்கும் தண்ணீர் தெளித்து ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம் ..

செய்தி மற்றும் படங்கள்
தனுசன்