அருள் மிகு குப்பிழான் கன்னிமார் அம்மன் ஆலய ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் ஒரு பார்வை. updated 30-04-2017


கடந்த ஆண்டு மகோற்சவம் முடிந்தவுடன் கோபுர திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடகால பகுதியில் கோபுர வேலைகள் முற்றாக முடிக்கப்பட்டு அழகாக காட்சி தருகின்றது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கன்னிமார் அடியார்கள் அந்த அளப்பரிய பேற்றை பெற்றுக்கொண்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கும்பாபிஷேக கிரிஜைகள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்று முடிந்தது.

முன்னைய காலங்களில் இப்படியான வேலைகள் செய்து முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும் ஆனால் தற்போதைய நவீன கனரக இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக ஒரு வருடத்தில் வேலைகள் நிறைவு பெற்றது. முன்னைய காலங்களில் நிதி ஒரு பிரச்சினையாக இருந்தது தற்போது அந்த பிரச்சினை இல்லை. கன்னிமார் ஆலய அடியார்கள் அன்னையின் அருளினால் பெரிய செல்வந்தர்களாக உலகெங்கும் வாழ்கின்றார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்பினால் கன்னிமார் அம்மனுக்கு ஒரு இராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.


கடந்த 20 வருடங்களில் கன்னிமார் அம்மன் ஆலயத்தின் வளர்ச்சி அளப்பரியது. இதற்கு காரணம் அடியார்களின் பங்களிப்பு மற்றும் ஆலய நிர்வாக சபை தலைவர் திரு சோ பரமநாதனின் வினைத்திறனுள்ள நிர்வாகம். அவரின் தலைமையில் நடைபெறும் இந்த நிர்வாகம் ஆலய வளர்ச்சியோடு நின்று விடாமல் ஆலயத்தினூடாக பல சமூகம் சாந்த சேவைகளையும் செய்து வருகின்றார்கள். மேலும் சமூகம் சாhந்த வேலைகளை தொடரவேண்டும் என்பது எல்லோரினதும் விருப்பமாகும்.


01-05-2017 திங்கட்கிழமை 2017ம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. வெளிநாட்டு அடியார்களும் இந்த மகோற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார்கள். கடந்த காலத்தை விட இம்முறை நாட்டில் பெரும் வெப்ப நிலை நிலவுகின்றது. ஆனாலும் ஆலய நிர்வாகம் முன்பு போல உற்சவத்தை மிகவும் சிறப்பாக செய்ய உத்தேசித்துள்ளனர்.