குப்பிளான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப் பெற்ற சப்த கன்னியர் சந்நிதானத்திற்கும், அம்பிகை வசந்த மண்டப கலசத்திற்கும் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா. updated 01-04-2016

சைவமும் தமிழும், தான தருமமும் ஒருங்கே விளங்கும் புண்ணிய பூமியாகிய ஈழத் திருநாட்டின் யாழ்ப்பாணத்தின் வடபால் குப்பிளான் கிராமத்தின் வீரமனைப் பதியில் கெளரியம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப் பெற்ற சப்த கன்னியர் சந்நிதானத்திற்கும், அம்பிகை வசந்த மண்டப கலசத்திற்கும் எதிர்வரும்-04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை -10 மணி தொடக்கம் 10.45 வரையான சுப முகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை சனிக்கிழமை அதிகாலை- 5.30  மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை காலை -9 மணி தொடக்கம் மாலை -5 மணி வரை அடியார்கள் எண்ணைக் காப்புச் சாத்தும் வைபவமும் இடம்பெறும். 

கும்பாபிஷேக தினத்தன்று காலை-8 மணிக்கு விநாயகர் வழிபாடு இடம்பெறவுள்ளதுடன்  முற்பகல்-10.15 மணிக்குத் தூபி அபிசேகம் அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், விஷேட பூஜை, அம்பாள் வலம் வரும் திருக் காட்சியும் நடைபெறும். 

சப்த கன்னிகள் உபயம் - திருமதி . சாரதாம்பாள் சண்முகநாதன் குடும்பம் 
வசந்த மண்டபப் பண்டிகை கட்டட நிர்மாணம் - திரு. சி. தங்கராசா குடும்பம்

 

 

செய்தித் தொகுப்பு :- செ- ரவிசாந்.