குப்பிளான் வடபத்திரகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள்  சங்காபிஷேக உற்சவம் விமரிசை (Photos) updated 20-05-2016


குப்பிளான் வட பத்திரகாளி அம்மன் திருக் கோயில் அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(20-05-2016)  காலை அம்பாளுக்கு விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி  இடம்பெற்றது. 


அதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம், வசந்த மண்டபப் பூஜைகள், ஊஞ்சற் பாட்டு என்பன  இடம்பெற்று  பிற்பகல் -1 மணியளவில் அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  மங்கள வாத்தியம் முழங்க, அழகிய பட்டுப் பீதாம்பரம் சூடி அம்பாள் எழுந்தருளிய காட்சியை என்னவென்று வர்ணிப்பது?  


இன்றைய உற்சவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டனர் . உற்சவ நிறைவில் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 


நாளை -21 ஆம் திகதி சனிக்கிழமை அம்பாளுக்கு விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெறவுள்ளது.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :- செ -ரவிசாந்.