<%@LANGUAGE="JAVASCRIPT" CODEPAGE="65001"%> kuppilanweb.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Katkarai Festivel 2011
Kannimar festival 2011
 

 

 

 

 


உணர்வுகளின் சந்திப்பு - ஆதித்ததாசன்

காவியங்களில் மட்டுமே சந்திக்கக் கூடிய சில நல்ல மனிதர்களை வாழ்க்கையிலும் சந்திக்க நேரும் போது வாழ்த்தக் கூட முடிவதில்லை வணங்கத்தான் தோன்றுகிறது. முத்து முத்தான அந்தக் கவி வரிகள் மு. மேத்தாவிற்குச் சொந்தமானாலும் பித்துப் பிடிக்க வைத்து, சித்தத்தைக் குளிரவைத்து, இதயத்தின் திறவு கோலாய் அவள் இதயத்தைத் திறந்து வைத்த விந்தையை, அவளால் நம்பக்கூட முடியவில்லை. மெத்தையைத் தட்டி விரித்து, சாத்தப்பட்டிருந்த யன்னல் கதவுகளை அவள் கரங்கள் அகலத் திறந்த போது, அங்கு அற்புதமான ரம்மியமான அதிகாலை கதிரொளிகளை அள்ளி வீசிய ஆதித்தன் உதயம் அவள் விழிகளை அகல விரியச் செய்தது. அவளைச் சோதித்த துயரங்கள் அத்தனையும் அகன்று, அவளைப் பாதித்த அவன் அன்பு முகம், அந்த ஆதித்தன் வடிவில் உதயமாவது போன்ற ஓர் இனிய உணர்வினை அவள் இதயத்தில் ஏற்படுத்தி மகிழ்வினைக் கொடுத்தது. தன்னையறிய ஒரு தடவை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வெள்ளிக் கிழமை என்று சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்த கலண்டர் அவளைச் சுயநினைவிற்குக் கொண்டு வந்து கடமைகளை ஞாபகப்படுத்தியது ம்.. ம் .. வெள்ளிக்கிழமை எத்தனை வெள்ளிகளைக் கடந்து வந்துவிட்டாள். அவள் துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்து நினைவுகள்.. வெள்ளித் தட்டினிலே வெள்ளை மனதுடன் அன்னை அள்ளியள்ளி அன்னை அன்னமூட்டிய நினைவுகள்! வெள்ளை மனதுடன் வெள்ளை யுனிபோர்மில் பள்ளிப் புத்தகங்களை அள்ளி அரவணைத்து பள்ளி சென்ற காலங்கள். பள்ளிப் பாடங்களில் உள்ளமதைப் பறிகொடுத்து, பள்ளி ஆசிரியர்கள் உள்ளம் நிறைந்திருந்த காலங்கள். பள்ளித் தோழிகள் சிலரின் பரிகசிப்பு ஒரு புறம். பாராட்டுக்கள் ஒரு புறம். அத்தனைக்கும் மத்தியில் பள்ளி மாணவர்கள் சிலரின் கடைக் கண் பார்வைகள் துளைத்தெடுக்கும் அம்புகள் ஒரு புறம் இத்தனைக்கும் மத்தியில் பேச்சுப் போட்டியாயினும், விளையாட்டுப் போட்டியாயினும், கலை நிகழ்ச்சியாயினும், அவள் பிரசன்னம் என்றால் அங்கு ஒரு தனியான களை. ஆசிரியர்கள் மத்தியில் அவள் ஓர் அதிசய மாணவி. புரியாத புதிர்;;. இந்தப் பிள்ளைக்கு இறைவன் நல்லதொரு எதிர்காலம் கொடுப்பான் என்ற நம்பிக்கை அந்த ஆசிரியர்கள் மத்தியில் நிலவியதில் ஆச்சரியமில்லை. அமைதியான சுபாவம். அற்புதமான அழகு வதனம். அவள் இதயத்து அழகுதனை வடித்து வைத்திருக்கும் அதிகாலை மலர் வதனம். அவள் பழகும் விதம் பலரையும் வியக்க வைக்கும் அவள் சுபாவம். அந்த இனிமை நிறை பேரழகு யாரைத்தான் வியக்க வைக்காது. அந்த நந்தவனக் குயில் உயர்தரப் பரீட்சை எழுதி முடித்து பாடசாலைக்குப் பிரியாவிடை சொல்லும் வரை யாரிடமும் இதயத்தைப் பறி கொடுக்காதது உண்மையிலேயே விந்தையே!. இப்படியும் ஒரு அதிசயப்பிறவியா? அப்படித்தான் அவள் இருந்தாள். அவளது பள்ளி வாழ்க்கை அற்புதமானது. அவள் மனதிற்கு நிறைவு தந்த காலங்கள் அது என்றால் மிகையாகாது. அந்தக் காலங்களை அவள் கடந்த போது தான் அவள் வாழ்வில் விதியின் விளையாட்டு அவன் வடிவில் வந்தது. அன்n;றாரு நாள் அவள் அன்னையுடன் ஆலய தரிசனம் செய்வதற்காக அந்த மறோன் கலர்ச் சேலையுடன், அன்றலர்ந்த ரோஐhவைச் இரட்டைச் சடைப் பின்னலாகப் பின்னி விட்ட கார்மேகக் கூந்தல் தனில் சூடிக் கொண்டு மூன்றாம் பிறை நெற்றியில் திருநீற்றுக் கோடிட்டு, அதன் மத்தியில் அழகு சாந்துப் பொட்டிட்டு தெருவோரம் வந்து கொண்டிருந்த போது, விதி மோட்டார் சைக்கிளில் நாகரீக உடையணிந்து அவன் வடிவில் வந்து வழி மறித்தது. இந்த ஊரில் அருணாசலம் என்பவர் யாருங்க? என்ற கேள்விக் கணையோடு, விழிகளை அவள் பக்கம் செலுத்திக் கொண்டு, விழுங்கிவிடும் பார்வைக் கணையோடு அந்தக் குரல் அவள் செவிகளில் வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக, அவளது அன்னை நீங்கள் எந்த அருணாசலத்தைப் பற்றிக் கேட்கிறீங்க தம்பி? ஏன்று பதில் கேள்வி தொடுத்தாள். ,அவன் மெல்ல நிதானத்துக்கு வுந்தவனாய், அது தான்ங்க சுவிசில் இருக்கிற நாதனின் அப்பா அருணாசலம். அவர் ஒரு ஆசிரியராம் என்றான் ஒரு வித செருமலுடன். ஆ.. அவரா தம்பி இப்படியே போய் வலது பக்கம் திரும்பி, முதல் இருக்கிற இடது பக்க வீடு என்றாள் அவள் அன்னை. சரி என்று அவளைப் பார்வையால் விழுங்கி விடுபவன் போல் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளை வேகமாகப் இயக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனது பார்வைகள் திரும்பவும் நான் உன்னைச் சந்திப்பேன் என்று அவளுக்கு கூறாமல் கூறிச் சென்றது. அவனது பார்வைகள் அவளுக்கு ஒரு வித அருவருப்பையே உண்டு பண்ணியது. என்ன இவன் இவனுடைய பார்வைக்கு என்ன அர்த்தம்? அவன் தன்னை தன் உரிமையாக்கிக் கொள்ள நினைப்பது போலல்லவா பார்வையால் விழுங்கி விட்டுப் போகிறான்; என்று அவள் இதயம் ஒரு படபடப்புடன் பேசிக் கொள்வது அவளுக்குத் தெரிந்தது. ஆலயத்தை நெருங்க, நெருங்க, அவள் மனதில் ஒரு வித பயம் கௌவிக் கொண்டது. அவளது அந்தராத்மா அந்த ஆண்டவனை மானசீகமாக இப்படி ஓரு இணைப்பு வேண்டாமே என்று மன்றாட்டமாக வேண்டிக் கொண்டது. ஆனால் அது அந்த ஆண்டவன் காதுகளுக்கு எட்ட வேண்டுமே! என்ன செய்வது ? விதியின் வடிவில் அவனது திருவிளையாடல் தானே அது. மறுநாள் எதிர்பாராத விதமாகவே அந்த மோட்டார் சைக்கிள் நாயகன் அவள் வீட்டு கேற்றடியில் நின்றான். அவனது அலங்கார உடைத் தோற்றத்தை யன்னலினூடாகப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அரக்கப் பரக்க ஓடிச் சென்று தாயிடம் விபரம் சொன்னாள். தாய் அவனிடம் போன போது அவன் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியபடியே உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். என்றான் என்ன சொல்லுங்க தம்பி என்ற தாயிடம் நான் நேரே விசயத்துக்கு வாறன் நேற்று உங்களைப் பார்த்துப் பேசினதில் இருந்து மனசில ஒரு ஆசை உங்கட மகளை கலியாணம் கட்ட ஆசைப்படுறன். நான் சுவிசில நல்ல கொம்பனியில் வேலை செய்யிறன். லீவில வந்திருக்கிறன், உங்கட சம்மதத்தை சொன்னா அப்பா அம்மாவைப் பொம்பிள பார்க்க நாளைக்கே கூட்டிட்டு வாறன். நீங்க சம்மதம் சொன்னா கையோட சுவிசிற்கு கூட்டிட்டு போய் விடுவேன். நீஙகள்; சம்மதம் சொல்லுவீங்களெண்டு எதிர்பார்க்கிறன். என்று பட்டென்று தன் மனதில் பட்டதைச் சொல்லி முடித்தான். இத்தனையையும் யன்னலோரம் நின்று செவிமடுத்த அவள் மனது அடித்துக் கொண்டது. ஓருவித பயம் அவள் இதயத்தைக் கவ்விக் கொண்டது. என்ன இவன் ஒரு நாள் பார்த்தவுடன் பெண் கேட்க வந்துவிட்டானே! இறைவா! என்னை காப்பாற்று என மானசீகமாக அவள் மனது வேண்டிக் கொண்டது. அது இறைவன் காதில் விழுந்தாலும் அவனது லீலை இதுவென்று அந்தப் பேதைக்கு எங்கு தெரியப் போகிறது.? nஐயித்தது அவன் தான் அவனது பணபலம் அவளது அன்னையைக் கூட ஆட வைத்து விட்டது. அன்னையின் அன்புக்கும் வேண்டுகோளுக்கும் அவள் வேண்டா வெறுப்பாகவே சம்மதம் தெரிவிக்க, ஐhம் ஐhம் என்று அவன் காட்டில் மழை பெய்தது. இன்று அவனுடன் குடும்பம் என்ற போர்வைக்குள் அவள் தன்னைப் போர்த்திக் கொண்டு எட்டு வருடங்கள் கடந்து விட்டன. அந்தப் போர்வைக்குள் அவள் அநுபவித்த சித்திரவதைகள் ஒன்றா இரண்டா? சொல்லித்தான் ஆற முடியுமா? சந்தைப் பொருளாக அவளை நடத்தியது, நடத்துவது நான்கு சுவர் மத்தியில் மனிதப் போர்வையில் ஓர் மிருகம் செய்யும் அராஐகங்கள் உலகுக்குத் தெரியுமா? தெரிந்து தான் என்ன செய்யப் போகிறது? அவள் மௌனமாக வடித்த கண்ணீர் பேசுமாக இருந்தால் கங்கையில் கலந்து கொண்டு பாப விமோசனம் பெற்றவர் கூட பாவியாகி விடுவார்கள். இந்த எட்டு வருடக் கண்றாவி வாழ்வில் அவள் கண்டது மூன்று மழலைச் செல்வங்கள்; மட்டுமே! விரும்பாத உறவின் பரிசு என்றாலும், அந்தச் செல்வங்களின் வாழ்வுக்காக பொறுமையில் பூமாதேவியை மிஞ்சிவிட்டாள். மொத்தமாக அத்தனை அயோக்கியத் தனத்தைக் குத்தகைக்கு எடுத்து விட்ட அவனது போக்குகளை புலம்புவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப் பேதையுள்ளம் தவித்த தவிப்புக்கள,; துடிப்புக்கள், கொதிப்புக்கள், குமுறல்கள், அத்தனையும் காதாசிரியன் ஒருவன் கையில் கிடைத்து விட்டால் அவனே அதைக் கதை பண்ணி பிரபல நாவலாசிரியனாகி விடுவான். அவள் நினைத்தாளோ இல்லையோ கடந்த வாரம் அவள் சற்று ஓய்வாக, இருந்தபோது வானொலியைத் திருப்பினாள். லண்டன்ரைமில் நிகழ்ச்சிகள் வரிசையில் பேசும் இதயங்கள் இன்றைய பிரதியாக்கம் ஆதவன் என்ற அறிவிப்பாளரின் இசைப் பின்னணியுடன் சேர்ந்த கணீரென்ற அறிவிப்பு. என்ன பேசும் இதயங்களா? அது என்ன தான் கேட்போமே என்று ஆர்வமாகச் செவிகளைத் தீட்டிய போது, அவளது செவிகள் அகலத் திறந்தது. என்ன என்ன என்னுடைய கதையை யாரோ கூறுவது போலல்லவா இருக்கிறது. என்னுடைய வாழ்க்கைக் கோலங்களை அல்லவா படம் பிடித்துக் செல்கிறது. அவளது செவிகள் மட்டுமல்ல விழிகளும் அகலத் திறந்து, இதயமும் பட் பட் என்று அடித்துக் கொள்ளப் பரபரப்பனாள். அத்தனையும் தன் கண்ணாடி விம்பமாக அவள் இதயம் பார்த்துக் கொண்டது. அதை யதார்த்தமாக நகர்த்திச் சென்ற விதம், அவளது பேசும் இதயமாகவே பேசிக் கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் யதார்த்தமான உயிர்பான சேர்வைகள் அவளை அதிசயிக்க வைத்தது. அவளது இதயத் துடிப்புகள் வேகமாகின. யார் இந்த எழுத்தாளர்? அவருக்கு எப்படி இப்படி ஒரு கதையை எழுத மனம் தூண்டியது? யாரிடமாவது விசாரித்து தன் கதையை அறிந்து எழுதினாரா?. இருக்காதே! எனக்கும் நான்கு சுவர்களுக்கும் இடையே நிகழ்ந்தவை எப்படி இவருக்குத் தெரிந்தது? அதற்குச் சாத்தியக் கூறே இல்லையே? இப்போது தான் அவளுக்கு ஒன்று புரிந்தது தான் சிறு வயதில் வாசித்த நாவல்கள் அத்தனையிலும் ஓர் உயிர்ப்பு இருக்கும்போது அதற்குள் நிறைந்த கற்பனைகள் கலந்து இருந்த போதும் அது வெறும் கதையென்று தீர்மானித்து விட்டு விடுவாள். ஆனால் இந்தக் காதாசிரியர் சற்று வித்தியாசமாக அத்தனை யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறாரே?. இவரைப் பற்றி அறிய வேண்டுமே . யார் இவர்? யார் இவர்? எப்படி இவரைத் தெரிந்து கொள்வது? என்று அந்தப் பேதை சிந்தித்து சிந்தித்து வானொலியைத் திருப்பி லண்டன் ரைம் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மனம் அதில் லயிக்க முடியவில்லை. அவளுக்கு அந்த கேள்விக்குப் பதில் தெரியும் ஆவல் தான் அத்தனையையும், முண்டியடித்துக் கொண்டு நின்றது. லண்டன் ரைம் நிறைவு செய்யும் நேரம் வந்தவுடன் தொலைபேசியை சுழற்றினாள். மறுமுனையில் ஒரு குரல் வணக்கம் யார் பேசுகிறீர்கள் என்றது? அவள் ஒரு வேகத்தில் தொலைபேசி இலக்கத்தை சுழற்றிவிட்டாளே தவிர வார்த்தைகள் தொண்டைக்குள் இறுகிக் கொண்டன. மறுமுனையின் அவசரம் சற்று நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஏமாற்றம் அவள் நெஞ்சில், சரி விடுவோம், வேண்டாம் என்றது மனம், மறுகணம், இன்னொரு முறை முயற்சி செய் என்றது. மீண்டும் சுழற்றினாள் தொலைபேசி இலக்கத்தை, அதே வணக்கம் செய்யும் குரல், வணக்கம் நான் ஒரு அபிமான நேயர் தங்களிடம் ஒரு வேண்டுகோள். நேற்று.. நேற்று உங்கள் லண்டன் ரைம்மில் பேசும் இதயங்கள் போனதே! அது பற்றி கொஞ்சம் கதைக்கலாமா?.. .. என்று தயங்கிக் கொண்டே இழுத்தாள். ம் சொல்லுங்கள் தாராளமாகப் பேசலாம். ஏன்றது மறுமுனைக் குரல், இல்லை அந்தக் கதையை வாசித்தவர் நன்றாக உயிர்ப்போடு வாசித்திருந்தார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அந்தக் கதையை எழுதியவர் பற்றிக் கொஞ்சம் கூறுவீர்களா? யதார்த்தமாக எழுதியிருந்தார். யார் அவர் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று ஒருவாறு தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள். . மறுமுனையில் ஒரு சிரிப்பு. அந்தச் சிரிப்பு நிச்சயமாக கேலிச் சிரிப்பல்ல என்று அவளால் உணர முடிந்தது. சிரிப்பிற்குப் பின் அவர் ஒரு ஆரம்ப கால எழுத்தாளர். அவர் கடந்த வருடம் எழுதி அனுப்பிய கதை தான் அது. நிறையக் கதைகள் சேர்ந்திருந்ததால், இப்போது தான் அதை வானலைக்கு எடுத்து வர முடிந்தது. அவர் பற்றித் தற்போது எதுவும் கூற முடியாதிருக்கிறது. எனென்றால் அவர் பற்றி மேலதிகமாக எதுவும் தெரிய முடியவில்லை. அவர் இப்போது தொடர்பு கொள்வதுமில்லை, காரணமும் தெரியவில்லை, எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை என்ற பதில் அவளை ஆச்சரியப்பட வைத்தது. கடந்த வருடம் எழுதிய கதையா? இதெப்படி இந்த வருடம் நடந்த நிகழ்வுகளைப் படம் பிடித்து கடந்த வருடம் அவரால் எழுத முடிந்தது? ஆச்சரியமாக இருக்கிறதே! ஏன்று மனம் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டது. சரி அவர் பற்றித் தகவல் தெரிந்தால் என் பாராட்டுக்களை அவரிடம் கூறிவிடுங்கள், நன்றிகள் வணக்கம் என்று விடைபெற்றாள். அவளது மனம் வேக வேகமாக அடித்துக் கொண்டது. இப்படியும் அதிசயமா?; ஒரு வேளை காதாசிரியன் என்பவன் வருகின்ற, நிகழ்வுகளை முன்கூட்டியே வடிப்பவன் தான் என்று முன்பு எங்கோ படித்தது நிஐம்தானா? ஏன்று அவள் மனது முணுமுணுத்துக் கொண்டது. அடுத்து வந்த நாட்கள் அவளுக்கு அதிசயமாக நகர்ந்தது. கனவுகளில் அந்தக் காதாசிரியர் வந்து பேசிக் கொள்வதும், அவர் படைப்புக்கள் பற்றி அவருடன் கலந்து விமர்சித்துக் கொள்வதும் நாளாந்தம் கனவுகளாக மலர்ந்து அவளை அதிகாலையில் அதிசயிக்கச் செய்தது. இன்று காலையும் அப்படித்தான் வழமையைவிட சற்று அதிகமாக அந்த கற்பனை காதாசிரியர் அவள் கனவில் வந்து பேசிக் கொண்டார். வழமைக்கு மாறாக, அன்றைய பேச்சு ஏதோ நன்கு பழக்கப்பட்ட ஒருவர் தன்னுடன் பேசுவதாக அவள் உணர்விற்குப் பட்டது. அவர் பேசிய விதம். அவர் அன்புப் பார்வைகள் பேசிய விதம் அவள் உணர்வுகளை ஏதோ ஓரு வகையில் பாதிக்கத்தான் செய்தது. பல தரப்பட்ட விடயங்களை அவர் பக்குவமாகப் பேசிய பாங்கு அந்தப் பேதையுள்ளத்திற்கு ஒரு ஆறுதலை, வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டு பண்ணி, அவள் மனதில் ஓர் உத்வேகத்தை, புத்தெழிலை, மலர்வித்துக் கொண்டது. திடுக்கிட்டு கண் விழித்ததும் கனவு என்று நிஐம் பேசிக் கொண்டது. ஆனால் அவளுள் ஓர் பரவச உணர்வு. என்றாவது ஒரு நாள் அந்தப் பண்பாளனை, அந்தப் பண்பட்ட எழுத்தாளனை, பார்ப்பேன் என்று அவள் இதயம் பேசிக் கொண்டது. அவள் கடமையில் ஒரு புது உத்வேகம் மலர்ந்து,கொள்ள கடிகாரம் விரைவாக நகர்ந்து கொண்டது.

நன்றி சுபம்.

அன்புடன் ஆதித்ததாசன்
இதுவோர் காலங்களின் காத்திருப்பிற்கான உண்மையான இரு உணர்வுகளின் சந்திப்பு