விக்கினேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் நடாத்தப்பட்ட பிரதேச செயலக விளையாட்டு. updated 21-05-2013


வலி தெற்கு உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2013 எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் மிகச்சிறப்பாக கழக இளைஞர்களின் மைதான ஓழுங்கமைப்பில் 17.05.2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு. மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்றது.இதில் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழக மைதானம் 200 மீற்றர் ஓடுதளம் அமைக்க போதுமானதாக மாற்றப்பட்டுள்ளதுடன் 11 பேர் பங்குபற்றுவதற்கான உதைபந்தாட்ட போட்டிக்கு சரியான நீள அகலம் போதுமானதாக இல்லாதபோதும் எமது விருப்பத்திற்கும் கிராம சேவகர் திரு .செ . ஞானசபோசன் அவர்களின் வேண்டுகோளிற்கும் அமைய விளையாட்டு விழா 2013 நடைபெற்றது. மெய்வல்லுனர் போட்டி மற்றும் 11 பேர் பங்குபற்றுவதான உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி உதைபந்தாட்ட போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியுடன் மோதி 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டது. இதில் மனுயன் கழகத்திற்காக அபாரமான கோல் ஒன்றினை பெற்றுக்கொடுத்ததுடன் கடைசி 20 செக்கனில் எதிர்பாராமல் ஏற்பட்ட தண்ட உதைமூலம் ஞானமுருகன் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.மேலும் இதுவரை இல்லாத வகையில் பெண்களும் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி எமது கழகம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டமை விக்கினேஸ்வரா விளையாட்டு கழக மகளிர் அணியின் திறமையும் இனைந்தமையும் கழக வளர்ச்சியினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.