மைலோ வெற்றிக் கிண்ணம்:குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி மாவட்ட மட்டத்திற்குத் தகுதி (படம்). updated 18-10-2015

மைலோ வெற்றிக் கிண்ணத்துக்காக மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்வதற்காக வலிகாமம் உதைபந்தாட்ட லீக் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 'ஏ' பிரிவில் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்றுச் சனிக்கிழமை (17-10-2015) மாலை 4 மணிக்கு இளவாலை ஹென்றியரசர் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் தெல்லிப்பழை நாமகள் அணியை  எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக  அணி மோதியது.இதன் போது குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணி பனாட்டி உதை மூலம் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை -10 மணிக்கு அராலி பாரதி  அணியுடன் இடம்பெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற அடிப்படையிலும் ,மாலை -4 மணிக்கு இளவாலை யங் ஹென்றிஸ்  அணியுடன் மோதி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட மட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. 
இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட்டு 17 ஆவது நிமிடத்தில் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் அணி சார்பாக  மதனரூபன் ஒரு கோல் போட்டுத் தன் அணிக்குப் பலம் சேர்த்தார்.இன்று பெற்ற வெற்றியின் மூலம் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் 10 அணிகளுள் ஒன்றாக குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி தெரிவு செய்யப்பட்டு கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.வலிகாமத்தில் உதைபந்தாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தால் பிரகாசித்து வரும் குறிஞ்சிக் குமரன் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் , வெற்றிகள்  தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதேவேளை ' பி ' பிரிவில் குப்பிளான்  பைவ் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மாவட்ட மட்டத்திற்குத்   தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

செய்தித் தொகுப்பு:-செ -ரவிசாந்.