மைலோ கிண்ணம் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டி 2017 இல் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி மாவட்ட சுற்றுக்கு தெரிவாகியது. updated 23-10-2017


இன்று 23-10-2017 நடைபெற்ற வலிகாமம் லீக் குழுவின் இறுதிப் போட்டியில் விளான் சென் அன்ரனீஸ் அணியை எதிர்த்து குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி விளையாடியது. இந்த போட்டியில் 02:02 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. சமநிலை தகர்ப்பில் 04-02 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு மாவட்ட சுற்றுக்கு தெரிவாகியது.


முன்னைய சுற்றுக்களில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி கல்வளை விநாயகர் அணியை 03:00 எனவும், கால் இறுதிப் போட்டியில் குலானையூர் கலைவாணி அணியை 04:00 எனவும், அரை இறுதிப் போட்டியில் சாவற்கட்டு மகாத்மா அணியை 01:01 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்து . சமநிலை தகர்ப்பில் 04:03 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ குழுமமும், யாழ்.மாவட்டச் செயலகமும் இணைந்து யாழ்.மாவட்டத்திலுள்ள உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் வருடாந்தம் நடத்தும் மைலோ கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 07-10-2017 முதல் ஆரம்பமாகியது

வழமையாக உதைபந்தாட்டக்  கழகங்களுக்கிடையில் மாத்திரம் நடைபெறும் இந்தச் சுற்றுப்போட்டியானது இம்முறை, பாடசாலை அணிகளுக்கிடையிலும் தனியாக இடம்பெறவுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் இந்த வருடம் 4 ஆவது வருடமாக நடைபெறுகின்றது. இ

 2013 ஆம் ஆண்டு 40 அணிகள் பங்குபற்றின. 2014 ஆம் ஆண்டு 60 அணிகளும், 2015 ஆம் ஆண்டு 100 அணிகளும் பங்குபற்றின. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு 150 அணிகள் பங்குபற்றின.

இம்முறை, இந்தச் சுற்றுப்போட்டியில் 100 பாடசாலை அணிகளும் இணைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 210 அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்தச் சுற்றுப்போட்டியின் போட்டிகள் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் நடைபெறவுள்ளது. நொக்கவுட் முறையில் மொத்தமாக 300 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை, மருதங்கேணி மற்றும் கிளிநொச்சி கால்ப்பந்தாட்ட லீக்குகள் ஒழுங்கமைத்து நடத்துகின்றன. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மைலோ கிண்ணத்தின், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப்போட்டியில் குருநகர் பாடும்மீன் அணி சம்பியனாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.