உடுவில் பிரதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. updated 14-02-2017

 


உடுவில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையே நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி சம்பியனானது. 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை சுண்ணாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பலம்பொருந்திய மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து குப்பிழான் குறிஞ்சிக்குமரன் அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் தமது ஆதிக்கத்தை செலுத்திய போதும் 13வது நிமிடத்தில் குறிஞ்சிக்குமரன் அணி வீரர் குருபரன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலாவது கோலினை போட்டார்.

 


இதனால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பான கட்டத்துக்கு சென்ற போது முதல் பாதி ஆட்டம் 1:0 என்ற கோல் கணக்கில் நிறைவுற்றது.

2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்களை போட முனைந்த பொதும் மேலதிக கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. வெற்றியை தேடித்தந்த வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளருக்கும், அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.