குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகமும், கணக்கறிக்கையும். updated 04-07-2014

எமக்கான மைதானம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக ஒரு நிர்வாகத்தின் கீளும் தனி ஒருவராகவும் நின்று விளையாட்டு கழக செயற்பாடுகள் முன்நெடுக்கபட்டு இருந்தது இனிமேல் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவது நேர்த்தியான நிர்வாகத்தின் மீது உறுப்பினர் வீர்களுக்கு நம்பிக்கை இன்மையை ஏற்பட்டுதும் என்பதினை கருத்தில் கொண்டும் முக்கியமாக இளையவர்களும்  நிர்வாகத்தில் உள்வாங்குவதோடு அவர்களுக்கு உள்ளும்  சமூகபொறுப்பினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 05.05.2014 தொடக்கம் புதிய நிர்வாகத்திடம் அணைத்து பொறுப்புகளும் ஒப்டைக்க படுகின்றது அதன் அடிப்படையில்

விளையாட்டு கழக தலைவராக : ப.கிருஷ்ணகுமார்  

உப தலைவர்         : மு. பிரசாந்த்

செயலாளர்           : க . அருளரசன்

பொருளாளர்          : செ. செந்தூரன்

 

     இத்துடன் விளையாட்டு துறை தலைவர்களாக

     துடுப்பாட்டம்    : அரவிந்தன்

     உதைபந்து  :     ஸ் . திலக்ஸ்சன்

     தெரிவு செயப்பட்டு இருந்தனர்.

 

பொருளாளர் அறிக்கை 

த.மாறன் ஆகிய நான் 2011 இல் இருந்து 05.06.2014  வரை குறிஞ்சிகுமரன் விளையட்டுக்கழகத்தினை பிரதிநிதிபடுத்தி என்னால் இயன்ற அளவு இக் கழகத்துக்கு பணி கிடைதமையிட்டு பெருமையிட்டு கொள்வதுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்த குறையினை எமது வீரமனை இளைஞர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சிக்கு புலம் பெயர் எமது உறவுகள் கரம் கொடுக்க  பெரிய தடைகள் பல  தாண்டி  புதிய மைதான நல்லாக்கத்ததிணை  மேற்கொண்டு இருந்தோம் , இதன் பின்னர் எமது கழகத்தின் வெற்றி படிகள் ஏராளம் மைதான நல்லாகத்தின் பின் உதை பந்தாட்ட சங்கத்தினால் நடத்தபட்ட தலைவர் வெற்றி கிணத்தில் குப்பிளான் மண்ணில் இருந்து முதல் முதலாக அரை இறுதி வரை முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்று கொடுத்து இருந்தோம் அதன் பின்னர் வலி. உதைபந்தாட்ட சங்கத்தினால்“A”   தர அணியாக கொண்டு சென்று இருந்தோம். 

துடுபாட்ட அணியினை பொறுத்த வரை யாழ் மட்ட ரீதியில் குறிஞ்சிகுமரன் எனும் பெயர் அறிய வைத்து இருந்தோம் எனலாம் 06_12 வரையான கிண்ணங்களை வென்று எடுத்து இருந்ததுடன் வலி தெற்கு பிரதேச செயலக அண்ணிகளுக்குள் முதலாம் இடம் பெற்று கொண்டதுடன் யாழ் மாவட்ட ரீதியில் நடை பெற்ற போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தோம்.

இவாறான எமது விளையாட்டு துறை சார்ந்த சாதனைக்களில் வெற்றி பெற காரணம் எமது மன உறுதியும் அயராத உழைப்பும் ஆக்கும் இவ் வெற்றியினை எம்முடன் கரம் கொடுத்து இருந்த அனைத்து எமது உறவுகளுக்கும் சமர்ப்பிபதுடன் எம்மை துரதிர்ஷ்டவசமாக தூற்றிய எமக்கு உந்துதலாக இருந்த  எமது குப்பிளான்  உறவுகளுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

 

கடந்த 2013 அதாவது 2014 ஆரம்பம் வரையுமான சகல கணக்கு விபரம் முன்னரே அனுப்ப பட்டு இருகின்றமையனாலும் 2014-01-01 தொடக்கம்2014-6-30 வரையான கணக்கு விபரங்கள்

2014 .06.28 வரை ஆண்டின் மொத்த வரவு = 165072

2014 .06.29 வரை ஆண்டின் மொத்த செலவு = 90140

மிகுதி                                                      =   74932

 

புதிய நிர்வாகத்திடம் மிகுதி கணக்கு மற்றும் என்னிடம் இருந்த அனைத்து பொருட்கள் மற்றும் தரவுகள் , letterhead , stamp, அணி சீருடை பற்று சீட்டு புத்தகம் அனைத்தும் 30.06.2014 இருந்து ஒப்டைக்க படுகின்றது எனக்கு கொடுத்த ஒத்துளைப்பிணை  புதிய நிர்வாகத்துக்கும் கொடுக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர் மற்றும் நலன்விரும்பிகளை கேட்டுகொள்கிறேன்.

 

நன்றி

த. மாறன்