கடந்து போன 2017 ஆண்டில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் நிகழ்த்திய சாதனைகள் பற்றிய சிறப்பு பார்வை. updated 10-03-2018

 


குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகமானது 2017 ஆண்டு பல போட்டிகள் தொடர்களை சந்தித்து அதில் குறிப்பிட்ட பல வெற்றிகளை பெற்றது. சிறிய கிராமமாகிய குப்பிழானின் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவு. ஆட்பலம், பொருளாதார பலம், ரசிகர்களின் ஆதரவு என்பது மிகவும் குறைந்த கழகம் தான் குறிஞ்சிக்குமரன். அப்படியிருந்தும் ஒவ்வொரு வீரர்களின் கடின உழைப்பு, பயிற்றுவிப்பாளரின் திறமை, குறிப்பிட்ட சிலரின் சிறிய பொருளாதார ஆதரவு மற்றும் உற்ற நண்பர்களின் ஆன்ம பலம் இவைகள் தான் இந்த சாதனைகளை படைக்க உதவியாக இருந்தது. பெரிய கழகங்களுடன் மோதுமளவுக்கு குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் முன்னேறியுள்ளது என்பதை இந்த வெற்றிகள் எடுத்துக் காட்டியுள்ளது. 2018 ஆண்டு இனிதாக முடிய வாழ்த்துக்கள்.


பங்கு பற்றிய தொடர்கள் - 14
பங்கு பற்றிய போட்டிகள் - 49
அதில் கிடைத்த வெற்றிகள் - 29
அதில் கிடைத்த தோல்விகள் - 14
சமநிலையில் முடிந்தது - 06

தண்ட உதை வெற்றிகள் - 06
தண்ட உதை தோல்விகள்- 03

வெற்றி கொண்ட தொடர் - 01 (AGA division)
வெற்றி கொண்ட தொடர் 2ம் இடம் - 01 (youth club)
அணி பெற்ற கோல்கள் - 69
எதிரணி பெற்ற கோல்கள் - 41

விருதுகள், கௌரவிப்புக்கள், அடைவுகள்
4ம் இடம் - நவிண்டில் கலைமதி – மாவட்ட தொடர்
FA கிண்ணம் - தேசிய ரீதியில் 64க்குள் நுளைந்தமை
Milo cup - மாவட்ட சுற்றுக்குள் தெரிவாகியமை
அரையிறுதி – நவிண்டில் கலைமதி – மாவட்ட தொடர்
காலிறுதி – யாழின் கில்லாடி – மாவட்ட தொடர்

கழக வீரர்களால் பெற்றுத் தரப்பட்ட கோல்கள்
கஜந்தன் - 14
கஜேந்திரன் - 13
கஜநாதன் - 10
சஞ்ஜி - 06
கஜமுகன் - 04
கஜரதன் - 04
ரஜீவன் - 04
குருபரன் - 04
ரிதுசன் -03
பாஸ்கி - 03
றெக்சன் - 02
அமீன் - 01
தனுசன் - 01
டரோல் - 01