குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் கடந்த வருடத்தின் அரும் பெரும் சாதனைகள்.


எமது கிராமம் 80க்கு முதல் விளையாட்டுத்துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி பல வெற்றிக் கேடையங்களை தமதாக்கி கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட உள்நாட்டு போர் இடப்பெயர்வு ஆகியவற்றினால் விளையாட்டுத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டது. போரின் முடிவில் விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் உறவுகள் அள்ளி வளங்கினர். ஆனாலும் விளையாட்டுத்துறை பின்னோக்கியே சென்றது. அதற்கு சில முக்கிய காரணமிருந்தாலும் பின்னோக்கி சென்ற விளையாட்டுத்துறையை மெல்ல மெல்ல எமது மக்கள் மறக்க தொடங்கினர்.


ஆனால் மின்னாமல் முழங்காமல் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் சிறந்த பயிற்விப்பாளரின் துணையோடு மிக வேகமாக வளர தொடங்கியது. இன்று வடக்கு மகாணத்தில் உள்ள பெரிய கழகங்களில் ஒன்றாக வலம்வருகின்றது. இவ்வளவு பணத்தை இறைத்தும் எமது விளையாட்டுத் துறை முன்னேறவில்லை என்ற ஆதங்கம் எல்லோர் மனங்களிலும் இருந்தது. குப்பிழான் என்ற கிராமத்தை முன்னுறுத்தி அவர்கள் வெற்றிவாகை சூடி எமது கிராமத்தின் புகழை உயர்த்துகின்றார்கள்.


ஆண்டின் ஆரம்பத்தில் உடுவில் பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பலம் மிக்க ஞானமுருகன் அணியுடன் 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்ற போதும் சிறப்பான பெறுபேற்றுடன் 2ம் இடத்தை தனதாக்கியதுடன் 2 இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் காளியம்பாள் அணியினை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கியதுடன் இமையான் மத்தி தொடர் ,பொலிகை பாரதி தொடர்களில் பலம்மிக்க மாவட்ட அணிகளை வீழ்த்தி சுப்பர் 8க்குள் நுழைந்ததுடன்..ஞானமுருகன் நடாத்திய வடமாகாண ரீதியான தொடரில் காலிறுதி வரையும் மற்றும் இருதயராஜா விளையாட்டுக்கழகம் மெலிஞ்சிமுனை நடாத்திய மாவட்டரீதியான தொடரின் இறுதியாட்டத்திற்கு முதல் முதல் நுழைந்ததுடன் பலம் மிக்க நாவாந்துறை சென்மேரிஸ் அணியினை வரும் 2017 இல் முதல் இறுதியாட்டத்தில் எதிர்த்தாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இளையோரை உள்ளடக்கிய குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணி நுட்பமான பயிற்றுவிப்பால் புது உத்வேகத்துடன் தொடர்ந்தும் பயணிக்க வாழ்த்துகின்றோம்

உத்வேகத்துடன் புதிய பல நுட்பங்களுடன் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் அணியின் பயிற்றுவிப்பாளர் திரு.க.சுரேந்திரன் அவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்