குறிஞ்சிக்குமரன் விளையாட்டு கழகத்தின் வளர்ச்சி பற்றிய மற்றொரு கழகத்தின் பார்வை. updated 22-12-2017

 

பயிற்சியாளரால் புடம்போடப்பட்ட குப்பிளானின் உதைபந்துக் குமாரர்கள். Kurinchikumaran SC Kuppilan
மண்வாசம் வீசும் குப்பிளானில் குறிஞ்சிகுமரன் விளையாட்டு கழகம் உதைபந்தாட்டம் தொடர்பாக எந்த ஒரு பின்னணியையும் கொண்டிருக்கவில்லை.

2015 வரை வலிகாமம் லீக்கின் சாதாரண ஓர் அணியாகவே இருந்தது. 2015 மைலோ கிண்ண தொடரின் வலிகாம லீக் மட்ட இறுதியில் ஹென்றிஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக மாவட்ட சுற்றுக்கு தெரிவாகியது. 
அதன் பின்னரே கழகம் பயிற்றுவிப்பாளருக்கான தேவையை உணர்ந்து யாழ் மத்திய கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் திரு.க.சுரேந்திரன் அவர்களை நிர்வாகம் நியமித்தது. இவரது பயிற்சியின் பயனாக அந்த வருடமே தீவகத்தின் மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.கழகம் மாவட்ட ரீதியில் நடாத்திய 11 பேர் கொண்ட தொடரில் 

பாசையூர் அன்ரனிஸ் 
சென் நீக்லஸ்
சென் லூட்ஸ்
நவிண்டில் கலைமதி
நசரேத் 

அணிகளை வீழ்த்தி நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்தாட இறுதிக்கு தெரிவாகியது. எனினும் துரதிஷ்டவசமாக அந்த இறுதிப்போட்டி இன்றுவரை நடைபெறாமை வருத்தத்திற்குரியது.
அதன் பின்னர் பல மாவட்ட, மாகாண தொடர்களின் லீக் சுற்றுகளுக்குள் தெரிவானமை அனைவரும் அறிந்ததே.

காலிறுதிகள் -
ஞானமுருகன் தொடர் 
2016 (07 site)
யாழின் கில்லாடி
2017 (11 site)

அரையிறுதி 
நவிண்டில் கலைமதி தொடர்
2017 (11 site)

FA Cup - 2016
வலிகாம லீக்கின் ஒரே ஒரு அணியாக தெரிவாகி தேசிய ரீதியாக 62 அணிகளுக்குள் நுழைந்தது.

மைலோ கிண்ணம் -
2015 மாவட்ட சுற்று
2017 மாவட்ட சுற்று

இக் கழகத்தின் சகல முன்னேற்றகரமான அடைவுகளுக்கும் இவர்களது பயிற்றுவிப்பாளர் திரு.சுரேந்திரன் அவர்களே முழுமுதற் காரணியாவார்.

வீரர்கள் விபரம் - 
பெரும்பாலான வீரர்கள் மிக இளவயதானவர்கள். 
2016 ல் 19 வயது தேசிய அணியில் எமது கழக வீரன் #ரிதுஷன்
(யாழ் மத்திய கல்லூரி) இடம்பிடித்து கொரியா சென்றவர். 
கழக வீரர்கள் கஜநாதன் மற்றும்
கஐந்தன் ஆகியோர் தற்போது இராணுவ உதைபந்தாட்ட அணியில் 
(Engineering Regiment) விளையாடுகின்றனர்.
இவ் அணியின் பலமே பின்னகள வீரர்களது ஆட்டமாகும்.

பின்களத்தில்
கஜநாதன் (நாகப்பா) 
ரிதுஷன் (கோவிந்து)
திலக்சன்

மத்தியகளத்தில்
கஜமுகன் (யங்)

முன்களத்தில்
கஜந்தன்
குரு
கஜேந்திரன்
ராசா
ஆகியோரது பங்களிப்போடு அணி பலம் பெற்றுள்ளது. 

சவால்கள்.
01. குறிப்பிட்ட அளவில் ரசிகர்கள் உள்ளமை. அதிலேயும் போட்டிகளுக்காக வெளியிடங்களுக்கு செல்கையில் அணியில் விளையாடும் வீரர்கள் மாத்திரமே செல்வர்.இது மிக சவாலனதாகும்.
02. வீரர்கள் இளவயது கொண்டவர்களாக உள்ளமையால் பயிற்றுவிப்பாளர் போட்டிக்கு செல்லாத சந்தர்ப்பங்களில் தடுமாறும் நிலைமை காணப்படுகிறது. இது வீரர்களின் கவனக்குறைவை தெளிவாக காட்டுகிறது.
03.பாரிய அளவில் பின்னணியை கொண்டிராத கழகமாக உள்ளமை.இதனால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றமை
எனவே இவற்றை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்தி இன்னும் இன்னும் கிண்ணங்களை வெல்லவும் சாதிக்கவும் சொக்கர் பான்ஸ் குழுமம் உங்களை வாழ்த்துகிறது. வாழ்த்துக்கள் குப்பிளான் குறிஞ்சிகுமரன் விளையாட்டு கழகம்.