குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் வல்லரசன் ' உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 2016 பற்றிய விபரங்கள். updated 15-09-2016

 


குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் வடமாகண ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி வடக்கின் வல்லரசன் என்னும் பெயரில் மின் ஒளியில் நடைபெற்று வருகின்றது. கடந்த 13-09-2016 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய போட்டிகள் நிகழ்ச்சி நிரலின்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சுமார் 59 கழகங்கள் பங்குபற்றும் இந்த உதைபந்தாட்ட போட்டிகள் பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


13-09-2016 போட்டி முடிவுகள்.

முதல் போட்டியில் அல்வாய் மனோகரா அணி தெல்லிப்பளை நாமகள் அணியை எதிர்கொண்டு 6:4 என்ற கோல் கணக்கில் அல்வாய் மனோகரா அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் மானிப்பாய் றெட்றேஞ்சர் அணி குப்பிழான் ஞானகலா அணியை எதிர்கொண்டு 3:1 என்ற கோல் கணக்கில் றெட்றேஞ்சர் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் ஊரெளு றோயல் புத்தூர் கலைமதியை எதிர் கொண்டு 6:2 என்ற கோல் கணக்கில் றோயல் அணி வெற்றி பெற்றது.

 


14-09-2016 போட்டி முடிவுகள்.

மணற்காடு சென் அன்ரனிஸ் A - யாழ் ஐக்கியம் = 03:01 

ஏழாலை பைவ்ஸ்ரார் - ஆனைக்கோட்டை யூனியன் = 05:03

நவாலி சென் பீற்றர்ஸ் - மணற்காடு சென் அன்ரனிஸ் B = 01:01
போட்டி சமநிலையானதால் தண்ட உதை முடிவில் நவாலி சென் பீற்றர்ஸ் 03:02 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.