ஞானகலா விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் இடப்பெயர்வுகளிற்குப் பின்னரான வரலாற்றில் முதன் முதலாக வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்து சாதனை படைத்துள்ளது. updated 26-05-2013

 வலிகாமம் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் குப்பிளான் தெற்கு ஞானகலா விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று 2013 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளதுடன் இடப்பெயர்வுகளிற்குப் பின்னர் (2000 ஆம் ஆண்டிற்குப் பின்) எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்டத்தில் பெற்றுக்கொன்ட முதலாவது வெற்றிக்கிண்ணமாகும். இப் போட்டிகளில் ஞானகலா விளையாட்டுக் கழகம் ஊரெழு றோயல் அணி (யாழ் லீக் வீரர்கள் தவிர்ந்த) குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் அம்பாள் விளையாட்டுக் கழகம் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் என மிகச் சிறந்த 18 அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணி அம்பாள் விளையாட்டுக் கழகம் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் ஞானகலா விளையாட்டுக் கழகம் என்பவற்றை வெற்றிகொன்டு இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்களகத்தினை 6 : 2 என்ற கோல்கணக்கில் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது. இன்று 25.05.2013 நடைபெற்ற இறுதிப்போட்டியில் இராசரத்தினம் கீர்த்தனன் 04 கோல்களினையும் இராசலிங்கம் றமேஸ் 01 கோலினையும் இராசரத்தினம் பிரணவரூபன் (யாழ் மாவட்ட அணி மற்றும் யாழ் பல்கலைக்கழக அணி வீரர்) 01 கோலினையும் அபாரமாக போட்டு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணியின் பெருமைகளை நிலைநாட்டினர். மகேந்திரம் மனுயன் இராசரத்தினம் கீர்த்தனன் ஆகியோரின் இனைப்பாட்டம் மிகச்சிறப்பாக அமைந்தமையும் ஏனைய வீரர்களின் ஒன்றினைந்த செயற்பாடும் வெற்றிக்கு வழிசமைத்தது.

இதில் மிகச்சிறந்த கோல் காப்பாளருக்கான விருது எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக வீரர் கேதீஸ்வரனுக்கும் மிகச்சிறந்த வீரருக்கான விருது இராசரத்தினம் கீர்த்தனனுக்கும் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிக்கின்னத்தினை உதைபந்தாட்ட அணி தலைவரான திரு. இரத்தினசிங்கம் கயன் எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணி சார்பாக பெற்றுக்கொண்டார்.

பிரதேச செயலக மட்டத்தில் நடைபெறும் விளையாடடுப் போட்டியில் எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அணி ஒவ்வெரு ஆண்டிலும் (2013 ஆம் ஆண்டு உட்பட) உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 2 ஆம் இடத்தினை பெற்று வருகின்றமை அறிந்ததே. நடைபெற்ற இளைஞர் கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எல்லே போட்டி கயிறுலுத்தல் போட்டியில் என்பவற்றில் இரண்டாம் இடங்களினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற விளையாடடுப் போட்டியில் ஆண் பெண் வேறுபாடின்றி மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அமரர் இராமநாதன் சிவசோதி ஞாபகார்த்த மைதான அபிவிருத்தியினை சிறப்பிப்பது போல இந்தவருடம் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் 2013 ஆம் ஆண்டு எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக ஒவ்வெரு அணிகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் சுற்றுமதில் பார்வையாளர் இருக்கை சிறு அரங்கு மற்றம் நெற்அடித்தல் என்பன பாரியளவில் அமரர் இராமநாதன் சிவசோதி ஞாபகார்த்தமாகவும் ஏனைய சில அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கும் எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக முன்னால் வீரர்கள் முன்வந்திருப்பதனை இட்டு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக தலைவர் என்ற ரீதியில் வீரர்கள் சார்பாக மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.

தற்போது வரை இராசேந்திரன் 65000ரூபாவினை அமரர் சிவா (சோக்காளி ) ஞாபகார்த்தமாக தரப்பட்டுள்ளது. மேலும் கரப்பந்தாட்ட தளம் அமைக்கப்பட்டும் உள்ளது. எதிர்காலத்தில் அதாவது மிகவிரைவில் மலசலகூடம் அமைப்பதற்கு தனபாலசிங்கம் குடும்பத்தினர் தயாராகவுள்ளனர். அத்துடன் குழாய் கிணறு அடிப்பதற்கு சிவகுரு பஞ்சலிங்கம் அவர்கள் முன்வந்துள்ளதுடன் விரைவாக செய்துதரவுமுள்ளனர். மேலும் ஓரிரு திட்டங்கள் செய்யவேண்டியுமுள்ளது. தண்ணீர் ராங் அமைத்தல் போன்ற திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

இவை அனைத்தும் கடந்த வருடம் நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் வீடியேவில் எம்மால் குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் செய்யப்படுகின்றன. மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை அமரர் மகாலிங்கம் குடும்பத்தினரின் 75000 ரூபா பணத்துடன் மட்டும் வேறு யாருடைய உதவியுமின்றி என்ன நோக்கத்திற்காக எவ்வளவு கஸ்ரத்தின் மத்தியில் செய்தோமே அதன் முழுமையான பலனை அடைவதனையிட்டு மிகுந்த மகிழ்சிசியடைவதுடன் நல்ல உள்ளம் கொண்ட முன்னால் வீரர்களின் ஆதரவும் எதனையும் எதிர்கொள்ள தயாராகவுள்ள வீரர்hளின் மனவுறுதியும் இருக்கும் வரை நல்ல உள்ளம் கொண்ட எமது முன்னால் மற்றும் தற்போதய வீரர்களின் திட்டங்களை எந்தவொருவராலும் தடுக்கமுடியாது என்பதனை அனைவருக்கும் உணர்த்தி முன்னேறுவோம் என்பதனை தற்போதும் எதிர்காலத்திலும் கண்டுகொள்ள முடியும்.

நன்றி

நல்ல உள்ளம் கொண்ட முன்னால் வீரர்கள் மற்றும் எமது விளையாட்டு கழக வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவருக்காகவும்
திரு. இ.நிரூபன் தலைவர் (விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்)