குப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தில் இடம்பெற்ற சைவ ஓதுவார்களின் பண்ணிசை.


குப்பிழான் கற்கரை கற்பக ஆலய வருடாந்த உற்சவத்தின் போது 7ம் திருவிழா நாயன்மார்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த உற்சவத்தில் எம்பெருமான் உள்வீதி வலம் வரும் போது நாயன்மார்களும் வலம் வருவார்கள். அதன் போது சைவ ஓதுவார்கள் தேவார பண்ணிசையுடன் வலம் வரும் அந்த அற்புத காட்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யாழ்பாணத்தில் வாழும் மிகச்சிறந்த ஓதுவார்கள் பங்கு பற்றி இசையுடன் பண்ணிசை பாடி பக்தி பரவசத்தில் ஆழ்த்துவார்கள். இந்த தெய்வீக பண்ணிசை எமக்கு ஒரு புத்துணர்வையும், மன அமைதியையும் கொடுக்கின்றது. இந்த இன்னிசையை பக்தி பரவசத்தோடு கேட்டு மகிழுங்கள்,