அமரர் சிவமகாலிங்கம் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வில் திரு ஜோதிலிங்கம் ஆற்றிய உரை மற்றும் மற்றும் நிகழ்வு பற்றிய விபரம். updated 26-08-2019

 

 

கனடா குப்பிழான் மக்கள் மன்றத்தின் அங்கிகாரத்துடன் இனிதே - 18-8-19(ஞாயிறு) நடைபெற்ற அமரர் சிவத்தமிழ் வித்தகம் சிவ மகாலிங்கத்தின் அஞ்சலி மற்றும் ஆசிரியர், சட்டத்தரணி திருவாளர் சிவசோதிலிங்கத்துடன் ஆன சந்திப்புகளிற்கு மன்றம் சார்பில் நன்றிகளை அதில் கலந்து சிறப்பித்தவர்களிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஆறு மாதங்களாக உத்தேசித்த நிகழ்ச்சிக்கு உரு கொடுத்த உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா நல் உள்ளங்களிற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

சிறீ ல சிறீ ஆறுமுக நாவலர் மற்றும் குப்பிழானில் பிறந்த காசி வாசி செந்திநாதையர் ஆகியோரைத் தன் குருவாக சிவ வித்தகர் கொண்டிருந்தார். காலம் போற்றும் மகானாக தன் பாணியில் நல் ஆசிரியராக, விரிவுரை யாளராக, சமயப் பிரசாரகராக , சித்தாந்த விரிவுரையாளராக , நூலாசிரியாராக வாழ்ந்து வழிகாட்டினார். சைவ பாராம்பரியமுள்ள நல் மாணாக்கர் களை நூற்றுக் கணக்கில் உருவாக்கினார். 1970 களில் ஆசிரியப் பணியில் உள் வாங்கப்பட்ட சிவவித்தகர் பின்னாளில் உரும்பிராய் இந்துக் கல்லூரி (80 களில்), யாழ் இந்துக் கல்லூரி( 88-90), பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர்(90-94), இதே நேரம் கல்வி இயல் துறையில் பட்டப் பின்படிப்பினை முடித்துக் சிறப்புப் பட்டம் பெற்றார்.

இவ்வாறான பல பெருமை மிக்க சிவ வித்தகரை நினைவு கூரி பல பெரியார்களை அழைப்பித்து அவர் தம் பணிகளை போற்றுவது எம் செம்மண்ணவரது கடமை. அதை எம்மால் முடிந்தளவு சிறப்பாகச் செய்துள்ளோம். அத்துடன் எம் கௌரவிபிப்பினை ஏற்று அத்துடன் ஊர் நிலமைகளை எம்முடன் பகிர்ந்து கொண்ட சிவஜோதி அண்ணாவிற்கும் எம் மன்றத்தின் நன்றிகள் உரித்தாகுக.