யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2015. updated 12-02-2014

யாழ்.குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை(10.02.2015) பிற்பகல் 01.45 மணி முதல் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தம்பிராசா தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் 100 மீற்றர்,200 மீற்றர்,400 மீற்றர்,800 மீற்றர் ஓட்டங்கள், அஞ்சலோட்டம், சாக்கோட்ட்ம், கயிறிழுத்தல், இடை வேளை நிகழ்வாக இசையும் அசைவும், விநோத உடைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் பழைய மாணவர்களுக்கான ஓட்டம்,பழைய மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கிடையிலான பந்துப் பரிமாற்றப் போட்டி என்பனவும் இடம்பெற்றன.

இறுதியாக பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும்,வெற்றிக் கேடயங்களையும் விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.இதன்படி சுந்தரசர்மா இல்லம்(பச்சை)-385 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும்,சுப்பையா இல்லம்(மஞ்சள்)-348 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும்,தம்பிராசா இல்லம்(சிவப்பு)-303 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

குறித்த விளையாட்டு நிகழ்விற்குப் பாடசாலையின் பழைய மாணவர்களும்,விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் பூரண ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்தி மற்றும் படப்பிடிப்பு:-செ.ரவிசாந்.

 

மேலதிக நிழல் படங்களை குப்பிழான்வெப் முகநூலில் பார்க்கலாம்.