எமது ஊரின் பொன்விழா

 

 

 

 

 

 

 

 

 

 


யாழ் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் சரஸ்வதி சிலை அமைப்பு. updated 29-09-2013பாடசாலையின் பிரதான வாசலுடன் நேராக கிருஸ்ணர் மண்டபம் முன்பாக கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருபவரும் கிருஸ்ணர் மண்டபம் அமைப்பதற்கு கூடிய நிதிப் பங்களிப்பை வழங்கியவருமாகிய சிங்கப்பூர் கிருஸ்ணர்ஐயா அவர்கள் ரூபா ஒரு இலட்சத்துக்கு மேலான பணத்தை வழங்கி மேற்படி சரஸ்வதி சிலை அமைக்கப்படவுள்ளது

நவராத்திரி ஆரம்ப நாளான 24.09.2014 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிருஸ்ணர் ஐயா அவர்களின் உறவினரும் அதிபருமான திரு இரவீந்திரநாதன் அவர்களும் கட்டட அமைப்பாளர் திரு க. காண்டீபன் அவர்களும் பாடசாலை அதிபர் திரு.த.தவராஜா, உப அதிபர் திருமதி விஜயராணி கிருபாரூபன் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி சிலை அமைக்கும் பணி திரு இரவீந்திரநாதன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெறுகின்றது.


கல்விக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

2013ம் ஆண்டு க.பொ.த.(சா.தர)ப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது உரும்பிராய் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் செல்வி தீபிகா சிவராஜா அவர்களுக்கு கிருஸ்ணர் ஐயா அவர்கள் வழங்கிய கல்வி ஊக்குவிப்பு நிதி ரூபா 5000.00 அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.