குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திற்குப்  புதிய அதிபர் நியமனம் (Photo)
updated 18-01-2016


குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராகத் தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியின் அதிபராகக்  கடமையாற்றி வந்த  கே .காராளசிங்கம் கடந்த ஜனவரி மாதம் முதலாம்  ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வலிகாமம் கல்வி வலயத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தொடர்ந்து 26 வருடங்கள் ஆசிரியர் சேவையையும் ,தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில்  9 வருட அதிபர் சேவையையும் இவர் நிறைவு செய்துள்ளார்.

மேற்படி பாடசாலையில் கடந்த இரண்டரை வருடங்களாகக் கடமை நிறைவேற்று அதிபராக இருந்து வந்த ரி.தவராஜாவுக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்தே புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது.ரி.தவராஜா தற்போது தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி  ஆசிரியராக நியமனம் பெற்றுள்ளார் .

முன்னர் பாடசாலையின் அதிபராகப் பதவி வகித்து வந்த ரி.தவராஜா அவர்கள் தனது பதவிக் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்ததுடன் மாணவர்களுடனும் ,ஆசிரியர்களுடனும் ,பெற்றோர்களுடனும் ,ஊரவர்களுடனும் இனிமையாகப் பழகும் ஒருவர்.ஒரு ஊடகவியலாளனாக என் மதிப்புக்குரியவராகவும் , மரியாதைக்குரியவராகவும் அவர் என் இதயத்தில் அழியாது  இடம் பெற்று விட்டார்.பாடசாலையில் நடைபெறும் பல்வேறு  நிகழ்வுகளுக்கும் என்னை அழைக்க அவர் தவறுவதில்லை.தினக்குரல்,குப்பிளான் வெப் போன்ற ஊடகங்களில் பாடசாலை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் நான்  வெளிப்படுத்துவது  தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக அடிக்கடி கூறிப்   பெருமிதப்படுவதுடன் ,ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களையும் கூறுவார் .அவர் வயது வேறுபாடுகள் கடந்து தோழமை உணர்வுடன் என்னுடன்  பழகிய நினைவுகள் என்றும் என் இதயத்தில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கும்.

உங்கள் பணி மேலும் சிறக்கப்  பாடசாலைச் சமூகம் சார்பாகவும் ,ஊர்மக்கள் சார்பாகவும் உளமார்ந்த வாழ்த்துக்கள் . 

செய்தித் தொகுப்பு :-செ -ரவிசாந்.