குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டி 2018. updated 25-02-2018

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த 16-02-2018 வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு ஆரம்பமாகியது. பாடசாலை அதிபர் திரு காராளசிங்கம் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது கிராமத்தை சேர்ந்த வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிகுமார் அவர்கள் பங்கு பற்றி சிறப்பித்தார். 
சிறப்பு விருந்தினராக கோட்ட கல்வி அதிகாரி திரு மாதவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி சுகந்தினி சுகுமார் மற்றும் திரு சோ பரமநாதன் அவர்களும் பங்கு பற்றி சிறப்பித்தார்கள்.

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.