குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல். updated 05-05-2015

குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்தவரும்
தற்போது ஜேர்மனி பல்கலைக்கழக மாணவியுமான
செல்வி பானுஜா சுதாகரன் அவர்கள்,
எமது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை
கிராமத்துக்கு வருகை தந்த தந்தையார் திரு சுதாகரன் ஊடாக
அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அப்பியாசக் கொப்பிகள், பேனைகள், பென்சில்கள், அழிறபர்
என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
31.03.2015 அன்று காலைக்கூட்டத்தின்போது
மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திரு சுதாகரன் அவர்களின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

திரு த. தவராஜா
அதிபர்