1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விநாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம்
அன்னை மடியில் 27-02-1944 ஆண்டவன் அடியில் 25-01-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் விநாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

என் வாழ்வின் முதல் தெய்வம்
என் அப்பா,
பிறர் வாழ தியாகம் பல புரிந்தவர்
சிந்தனையில் தீங்கு நினைக்காதவர்
இறை பக்தி மிகுந்தவர்
அன்பின் அரிச் சுவடு
ஒரு காதல் தேவதையின்
இரண்டு கண்கள்
எங்கள் வாழ்வின் முன்னோடி
எமக்கா மட்டும் வாழ்ந்த
என் அப்பா
இன்னும் பல ஜென்மம் இருப்பின்
உங்கள் மகளாய் நான் பிறக்க
வேண்டும்
மரணத்தின் வலி இது என்று
எங்களை துடிக்க வைத்து
எங்கு சென்றீர்கள்
என் தாயுடன் இறைவன் அடியில்
இளைப்பாறுங்கள் இருவரும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
மறையவில்லை அப்பா
என்றும் அழியாத பொக்கிசம் என் அப்பா.

 

என்றும் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.