ஒளி விளக்கு அணைந்தது! எம் உள்ளங்கள் நொந்தன!! updated 19-07-2015

 


நம் குப்பிழான் மண்ணின் அருந்தவப் புதல்வனாக பிறந்து அம்மண்ணின் உயர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்து தான் பிறந்து, தத்தித் தவழ்ந்து, தடம் பதித்துப், பள்ளிக்கு நடந்து, ஓடி விளையாடிய மண். புன்னாலைக்கட்டுவன் தெற்கு குப்பிழான் என்றும், ஏழாலை வடக்கு குப்பிழான் என்றும், மயிலிட்டி தெற்கு குப்பிழான் என்றும், மூன்று கிராமங்களும் சொந்தம் கொண்டாட விரும்பாத பெருந்தகையாளர் குப்பிழானைத் தனிக் கிராமமாக உருவாக்குவதில் அல்லும் பகலும் அயராது உழைத்து குப்பிழான் கிராமத்தை தனிக்கிராமாக பரிணமிப்பதற்கு பல உயர்ந்த உள்ளங்களுடன் இணைந்து 01-01-1964இல் வெற்றியும் கண்டார். 2014ம் ஆண்டு நம் குப்பிழான் கிராமம் பொன்விழா கண்டு மகிழ்ந்தது.


ஒரு கிராமத்திற்கு என்னென்ன தேவை என்ற தீர்க்கமாக யோசித்து அவற்றை செயல்படுத்துவதற்குப் பெரிதும் பாடுபட்டு தன்னலம் சற்றும் இன்றித் தனது குடும்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாது தான் பிறந்த மண் குப்பிழான். குப்பிழானின் வளர்ச்சியை பெரு நோக்கோடு; நேசித்து 1974ல் சித்தாந்த ரத்தினம் பொறியலாளர் உயர் திரு க. கணேசலிங்கம் அவர்களை நாடி அவர் தம் உதவியுடன் எமது கிராமத்தை ஒளியூட்டி மகிழ்ந்தார். ஆலயங்கள் நிறை அழுகுறு குப்பிழான். அவ்வாலயங்களின் புனருத்தாரணங்களை அந்த அந்தப் பகுதியில் வாழும் மக்களே செய்து மகிழ்ந்தனர். சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலயத்தின் பொறுப்பைப் பல பெரியோருடன் இணைந்து ஆலய வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல புனருத்தாரண வேலைகளையும் அழகுறச்செய்து வருடாந்த மகோற்சவ விழாவையும் அரம்பித்து வைத்தார்கள். எமது விக்கினேஸ்வரா வித்தியாலயத்தை மகாவித்தியாலயமாக தரமுயர்த்துவதில் பெருமுயற்ச்சி செய்து வெற்றியும் கண்டு மகிழ்ந்தார். இன்னும் கிராமத்தின் முக்கிய அங்கங்களான நூல் நிலையம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், நெசவு சாலை, சமாதான சபை போன்ற இன்னும் பலவற்றை அமைத்து கிராமத்தை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து நிம்மதியடைந்து வாழ்வதற்கு பல வழிகளிலும் சிரமம் பாராது உழைத்தவர் பெருந்தகை திருவாளர் தம்பு தருமலிங்கம் என்றால் எவராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது.


மேலும் மக்கள் யாவரையும் அன்புடன் அரவணைத்து அமைதியான இன்சொல்லால் அவர்தம் உள்ளங்களைக் கவர்ந்து செயலாலும் செயல்வீரர் அமரர் திரு தம்பு தருமலிங்கம் ஆவார். அன்னாரின் பிரிவு ஆற்றவொண்ணாது அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராhத்திக்கின்றோம். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


திரு தங்கவேல்
கனடா.