அமரர் திருவாளர் தம்பு தர்மலிங்கம் அவர்களின் மறைவு! செம்மண்ணின் புலம்பல்

 


கோபுரம் ஒன்று சாய்ந்தது.


கோபுரம் ஒன்று சாய்ந்தது மண்ணில்
ஊரே அழுகுது தேற்றுவார்ரார்?
அன்னை குப்பிழான் அழுதாற்றுறாள்
என்னை மன்றில் ஏற்றிய மகனே!
எங்கு சென்றாய்? ஏங்கி அழுகின்றேன்
தங்க குணமுடைத்தர்மலிங்கமே!
எங்கு சென்றாய்? ஏங்கி அழுகிறேன்
தரணியில் நான் தலைநமிர்ந்திட
அயராது உழைத்தாய் அருந்தவப் புதல்வனே!
சொக்கர்வளவு சோதி விநாயகர்
அத்தி முகத்தான் அருளினால் நீ
எத்தனை பணிகள் ஆற்றினாய் மறவேன்
நூல் நிலையம் அமைத்திட
அல்லும்பகலும் அயராதுளைத்தாய்
ஊரக்கொரு பள்ளி - அது
விக்கினேஸ்வரா வித்தியா சாலை - அதை
மகாவித்தியாலயம் ஆக்கிட
அரும்பணி புரிந்ததை மறவேன் நான்
குப்பிவிளக்கிற் குவிந்து கிடந்த என்னை
குமிள்;விளக்கேற்றி ஒளிரச் செய்தாய்
என் பிள்ளை சித்தாந்த வித்தகர்
காசியில் வாழ்ந்தவர் செந்திநாதையருக்கு
மணிமண்டபம் அமைக்க அயராது உழைத்தாய்
வெளியூர் வாசிகளை ஒன்றிணைத்துப் பல
நற்பணியாற்றிட பணி புரிந்தாய்
புன்னகை தவள இன்முகம் காட்டி
மென்மையாய் பேசி காரியம் ஆற்றுவாய்
என் மக்கள் உயர்ந்திட ஆலயங்கள் சிறந்திட
கல்வி வளர்ந்திட கலைகள் பெருகிட
அரும்பணியாற்றிய அற்புத மகனே.!
சித்தம் கலங்கித் தேம்பி அழுகின்றேன்.
புலம்பெயாந்தாலும் எனைமறவாது
நிலம் என் நினைவில் விழும் - என்
மக்களின் ஆறுதலால் தேறி நிற்கிறேன்
மகனே! உன் ஆன்மா சாந்தியடைவதாக.

ஆக்கம்
திருமதி தங்கமுத்து தம்பித்துரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்.