தாய் மரம் சரிந்தது.

குப்பிழான் கிராமம் தன்னைத்
குவலயம் காண வைத்த
தருமத்தை போற்றி வாழ்ந்த தருமலிங்கம் ஜயா

கிராமத்தின் விடிவெள்ளி யொன்று
கிராமத்திற்கே வாழ்வைத் தந்து
உதயத்தின் தலைவனாக
சமூகத்தின் தலைவனாக
ஆலயத்தின் தலைவனாக
ஆத்மஜோதியின் தலைவனாக
வாழ்ந்திட்ட ஜயாவிற்கு
வரலாற்றில் என்றுமுண்டு - இடம்

உன் பணி கண்டு நாங்கள்
உவகையற்று இருந்தோம் என்றும்
நல் பணி நாங்கள் தொடர
நல் வழி காட்டும் ஜயா
தாய் மரம் சரிந்தது இன்று
சரித்திரம் நாளை சொல்லும்
கிளை பல தாங்கி நின்ற
வேர்களும், விழுதுகளும் - நாளை
உன் பணி தொடரும் - என்று
உறுதியுடன் சொல்வோம் இன்று.

கப்பிழான் கிராமத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்த அமரருக்கு. எமது அஞ்சலியையும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


குப்பிழான் மக்கள் சார்பில்
திரு தி சசிதரன் (ஆசிரியர்)