கண்ணீர் அஞ்சலி

 

 

ஊர்பற்றை எமக்கு ஊட்டிய பிதாமகன்.

குப்பிளான் பெற்றெடுத்த மைந்தன் தம்பு தறுமண்ணா. ஊர்பற்றை எமக்கு ஊட்டிய பிதாமகன். நாம் அவருடன் இருந்தா காலத்தில் நமக்கு என்ன என்ன தேவையோ அதையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற்றி கொடுக்கும் மிகச்சிறந்த உள்ளம் படைத்தவர். எமது கன்னிமார் கெளரிஅம்பாளின் வளர்சியில் முக்கிய பங்காளர் மட்டுமல்லாமல் குறிஞ்சிக்குமரன் சனசமுக நிலையத்தின் ஆரம்பகால நிறுவனர். குப்பிளான் வீரமனைக்கு என்று ஒரு பாதை அமைப்பதற்கு எத்தனையோ இடையுறுகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றி கொடுத்து எமது பகுதி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தார். அதைவிட அவர் குப்பிளான் மயானத்தில் சிரமதானப் பணிகளில் முன்னின்று எத்தனையோ பிரச்சனைகளைக் கண்டு துவண்டு போகாமல் எது வந்தாலும் அத்தனையையும் உள்வாங்கி முடித்து வைக்கும் ஆற்றல் கொண்ட பெருமகன். இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கிறார் இவரின் அத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு
லோகநாதன்
டென்மார்க்
குப்பிளான் வீரமனை .