செம்மண் சுடர், கிராமஜோதி தம்பு தருமலிங்கத்திற்கு சிங்கப்பூர் க.கிருஷ்ணனின் நினைவு அஞ்சலி.

 


குப்பிழான் உருவாக்கத்திற்கும், குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூகநிலையம், குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம், குப்பிழான் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயம், குப்பிழான் செந்திநாதர் ஞாபகார்த்த சபை, ஏழாலை ஆத்தமஜோதி முத்தையா ஞாபகார்த்த சபை போன்ற பல்வேறு அமைப்புக்களின் தலைவராக இருந்து அவற்றின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சமூக சேவையாளர், சமாதான நீதவான், கிராம பற்றாளன், குப்பிழான் மண்ணில் வாழந்து வந்த மூத்த குடிமகன். உலக நாடுகளில் வாழும் குப்பிழான் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எனது நண்பன் தம்பு தருமலிங்கத்தின் மறைவுச் செய்தி கேட்டு ஆழந்த துயருறுகின்றோம்.

மண்ணிற் பிறந்த யாவரும் ஒரு நாள் மடிவது திண்ணம் ஆனால் குப்பிழான் கிராமத்திற்கு நீர் செய்த சேவை என்றும் வரலாறு கூறும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கும், குப்பிழான் வெளிநாடுகளில் வாழும் அன்னாரின் பிள்ளைகள் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

குப்பிழான் மூத்த குடிமகன்
சிங்கப்பூர் க.கிருஷ்ணன்