கண்ணீர் அஞ்சலி


குப்பிழான் மண்ணின் ஒளிவிழக்கு அணைந்ததே!
எம்மண்ணுக்காய்ச் செம்மண்ணுக்காய் உழைத்த
உத்தமர் தருமண்ணா எங்கே?
தான் அறிவது அறிந்த காலம் முதல்
பேச்சும் உள் மூச்சும் உயிர்ப்பும் ஊர்
குப்பிழான் மண்ணுக்காய் அயராது உழைத்த செம்மல்
அருஞ்செயலாளர் தருமண்ணா, தருமண்ணா என
எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட
அண்ணா! எங்கு சென்றீர்கள்? ஏழாலை
வடக்காய் ஒட்டி இருந்த எம்மண்ணைத்
தனிக்கிராமமாக்க நீங்கள் ஆற்றிய
சேவை அளப்பரியது. குப்பிழான் தனிக்கிராமத்தின்
தந்தையும் நீங்களே! சொக்கவளவுச் சோதி
விநாயகர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தர்மகர்த்-
தாவும் நீங்களே! விக்கினேஸ்வரா சனசமூக
நிலையத்தை உருவாக்குவதிலும் அயராது
உழைத்த உத்தமரும் நீங்களே! விக்கினேஸ்வரா
மகாவித்தியாலயத்தின் வளர்ச்சியிலும்
அயராது உழைத்த பெருமைக்குரியவரும் நீங்களே
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியராய் ஊராரை
அரவணைத்து வழிகாட்டிக் குப்பிழான் மண்ணைத்
தலைநிமிரச் செய்த தனயன் நீங்களே! சமமாதான
நீதவானாய் சாந்தமான பேச்சாளனாய் அன்பின்
உருவமாய் பண்பின் சிகரமாய் திகழ்ந்த எங்கள்
அண்ணா! காலங்கள் உள்ளவரை நாம் உங்களை
மறவோம்.

 

உங்கள் பிரிவால் ஆறாத்துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள் பேரக் குழந்தைகளோடு
நாம் ஆறாத்துயருறுகின்றோம்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்
(கனடாக் கிளை)