2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாக்கியம் வல்லிபுரம்
அன்னை மடியில் 15-03-1934 ஆண்டவன் அடியில் 30-03-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வல்லிபுரம் அவர்களின் 2 ஆண்டு நிவைஞ்சலி.

அன்னை நினைவலைகள்
கார் கூர் வசந்தமென
காலங்கள் கடந்தனவே
காலன் உமையழைத்து
காலம் கடந்ததுவே

ஓராண்டுத் திங்கள்
உருண்டோடிப் போனதம்மா
ஓயாத அலைகள் என
உன் எண்ணம் ஓயவில்லை

மாறாது நினைவலைகள்
மலர்ந்த உன் மதிமுகத்தை
இறைவன் மலரடிகள்
இணைந்தே அமைதி பெற
அன்னையே உமை நாங்கள்
ஏத்தியே போற்றுகின்றோம்.


என்றும் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள்
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.