31ஆம் நாள் நினைவஞ்சலி

 
   
அமரர் திருமதி சிவஞானம் சம்பந்தர் 
அன்னை மடியில் 18-03-1947 ஆண்டவன் அடியில் 24-04-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் சம்பந்தர்  அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலி.

 

  

ஓய்ந்திடுமா அம்மா! எங்கள் கண்ணீர் துளி?
உங்கள் நினைவுகள் உயிர்துளிகளாய்
இனி எங்கள் இதயங்களில்!

உள்ளமது உறங்காது உணர்வுடன் போராடி
உறைவிடம் நீ தேடி சென்றாயோ?
பற்றும் பாசமது நட்போடு பகிர்ந்தளித்த
உன்அன்பு முகம் மறப்போமா?
அன்று முதல் இன்று வரை 30 வருடங்களாக
தனியாக
உன் அன்பால் எம்மை அணைத்துக் கொண்டவளே

கண்ணீர் விட்டு அழுகின்றோம்
எம் பேச்சுத்துணை
இறைவனடி சென்றதனால்!
தளராத அன்பை நீ தந்தாய் அம்மா!
அந்த இறைவனுக்கு இரக்கம் இல்லை அம்மா!

ஆலமரம் சாய்ந்ததம்மா அதன்
விழுதுகள் இனித்தாங்கிடுமோ?
கூடு ஒன்று சிதைந்ததம்மா...
உன் குருவிகள் தவிக்குதம்மா
ஆலமரம் இல்லாமல்.....

யார் துணை தான் வந்தாலும்
ஈடு செய்ய முடியாது
உன் நினைவு வற்றாது அம்மா தெய்வமே

உன் ஆசை முகம் மறக்கமா அம்மா?
உன் அன்பு வார்த்தைகள் மறக்குமா அம்மா
உதிர்வு உன் உடல் கண்டதும்
உன் உணர்வுகள் என்றும் எம் நெஞ்சில்
உன் இருப்பிடம் இனி என்றென்றும் எம் இதயத்தில்
இன்றல்ல ஒரு நாள் உன் மடி சாய வருவோம்

நம்பிக்கையோடு எம்மை தனிமரமாக வளர்த்த எம் அம்மாவே
எல்லாவற்றிற்கும் நன்றி எம் தேவதையே

எமது ஆருயிர் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

                                    

 


 

 

எமது ஆருயிர் அம்மாவின் துயர செய்தி கேட்டவுடன எமக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் kuppilanweb facebook மூலம் எமக்கு ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும், குப்பிழான் வெப் பொறுப்பாளர் அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகள். இறுதி பயணத்தில் பங்கேற்றவர்களுக்கும் நன்றிகள்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
காந்தன் - 0094773408786
முத்துக்கிளி - 0094776025942