எமது மண்ணையும் மக்களையும் நேசித்த ஊர்பற்றாளன் செம்மண் சுடர் பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்கள். 19-08-2016 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். எமது கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவரும், முன்னாள் கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாருமான திரு நடனசிகாமணி அவர்கள் விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானம் உருவாக்கம் போன்ற பல விடயங்களில் தன்னை அர்ப்பணித்தவர். அவருக்கு எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்.

 

 

ஊர்பற்றாளன் செம்மண் சுடர் பொன்னம்பலம் நடனசிகாமணி அவர்களின் இறுதி நிகழ்வின் சில செய்தித்துளிகள். updated 23-08-2016


அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்கிசையில் உள்ள மகிந்த மலர் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊரவர்கள், சக பத்திரிகையாளர்கள், நண்பர்கள் பங்கு கொண்டு அன்னாருக்கான இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.அன்னாருக்கான புகழுரையை திரு ஒ.தரன் (ஆசிரியர்). திரு சோ.பரமநாதன் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்) போன்றோர் நிகழ்த்தினார்கள். நன்றியுரையை அவரது மகன் நிகழ்த்தினார். அன்னாரின் பூதவுடல் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


 

படங்கள்
சி.திசாந்தன்