திருமதி நாகேஸ்வரி நடராஜா ஆசிரியர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

 


மாதருள் மாணிக்கம் எங்கே
மாதருள் மாணிக்கம் எங்கே? மறைந்ததா?
நம்ப முடியவீல்லையே! கேட்டது
உண்மையா? பிரேமையா ஜயகோ!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
திருநெல் வேலியின் முத்து. குப்பிழான்
பெற்ற சொத்து. அறிவெனும் உரம்
ஊட்டி ஆயிரம் ஆயிரம் மாணவர்களுக்குக்
கல்விப் பயிர் வளர்த்த வித்தகி. உலகப்
பரப்பெங்கும் அவரிடம் கற்ற மாணவர்கள்
கவினுடன் மிளிர்கின்றனர் . மாணவர்களை
வளர்த்ததோடு அவர் நிற்கவில்லை
தன்னோடு சேர்ந்த ஆசிரியர்கள் மற்ற குடும்ப
பெண்களுக்கும் குடும்ப வாழ்வின் தத்துவங்
களையும் வாழும் வகைகளையும் எடுத்துக் கூறி
தானும் வாழ்ந்து காட்டி வழி காட்டி
வாழ வைத்த தெய்வம் எம்மை ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளத்துயில் கொண்டாரோ!
அம்மா! உங்களை நாகேஸ்வரி
அம்மனாய் கண்டோம். இதயத்தால்
வணங்கினோம். எங்கள் உள்ளங்களில்
உறைந்த ஆசிரிய பெருந்தகையே!
தர்ம தேவன் தன் கடமையை ஏற்று ஆண்டவன்
அடியில் சேர்த்து விட்டான். உன்பிரிவால்
துயருறும் கணவன் மக்கள் மருமக்கள் பேரக்
குழந்தைகள் பூட்டப் பிள்ளைகள் உற்றார்
உறவுகள் ஊராரோடு நாமும் மீளத்துயரலில் வாடும்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் (கனடா கிளை)