மாதாஜிக்கு இதய அஞ்சலி

 


செந்தி நாதையரின்
செம்மை நெறியில்
விசாலமான உள்ளமுடன்
விஞ்சு பணி செய்தவரே!

'மாதாஜி என்றே
மானிலம் போற்றும்
மாண்புறு நூல்களினைப்
படைத்தவரே!

சைவமும் தமிழும்
சகத்தினில் தழைக்க
ஆசானாய் அறிவொளி பரப்பி
ஆன்மீக ஒளியினை
அவனியிலே ஏற்றி வைத்தாய்!

சிவராத்திரி நன்னாளில்
சிவனுடன் கலந்துவிட்ட
குப்பிழான் தந்த உத்தமியை
குவலயத்தில் என்றும் மறவோமே!

 

- குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ்