கண்ணீர் அஞ்சலி

 

மாதாஜி என்னும் அகல் விளக்கு அணைந்ததே!

 

 

குப்பிழான் அன்னையின் அகல் விளக்கே!

எங்கேயம்மா சென்றாய்?

செம்மண்ணின் செந்தமிழ்ச் செல்வியே!

புலவர்மணியே!

விசுவாம்பா-மாதாஜி எங்குற்றாய்?

எம்மண்ணின் மாதவச் செல்வியே!

யோகர் சுவாமியைச் சிந்தையில் நிறுத்தித் தொண்டாற்றிய உத்தமியே!

உங்கள் பிரிவு எங்களை வாட்டுகின்றது.

துறவறம் பூண்டுவரினும் குடும்பத்தைக் கட்டிக்காத்து

சகோதரசகோதரியரின் பிள்ளைகளைக் கற்பித்து ஆளாக்கிய பெருமைக்குரியவர்

கிளிநொச்சியில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு ஆதரவளித்து வளர்த்த அற்ப்புதத்தாயம்மா!

குருகுலச் சிறுவர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த தெய்வம் நீயம்மா!

படிக்குங்காலத்தில் தவக்கோலம் பூண்டு சிவத்தொண்டு புரிந்த திலகவதி நீயம்மா!

எம்அன்னை குப்பிழான் நின்பிரிவால் தேம்பி அழுகுன்றாள் தாயே!

மாதாயி!

எம்மண்ணில் உதித்த மாணிக்கம் நீயம்மா!

       12-11-2011 அன்று உன் முத்து விழாவில் உன்புகழை எத்தனை பெரியோர்கள் வியந்து போற்றினர்.

பெருமிதம் அடைந்தோம் அம்மா!

உங்கள்பிரிவு எங்கள் மண்ணுக்குப் பேரிழப்பாகும்

தாயே மாதாயி!

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கன்றோம்

உங்களைப் பிரிந்து வாடும் சகோதரிபிள்ளைகளோடு நாமும் துயருறுகின்றோம்.

உங்கள் ஆன்மாசாந்தியடைவதாக!

 

 

குப்பிழான் விக்கினேஷ்வரா மக்கள் மன்றம்-கனடா

    ஆக்கம்-தங்கமுத்து-தம்பித்துரை