எமது மண்ணின் ஆசான் அமரர் கந்தையா சண்முகம் அவர்களுக்கு ஒரு அஞ்சலி .குப்பிழானை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சண்முகம் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். அன்னார் தான் வாழ்ந்த காலப்பகுதியில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டும் கடமைகளை செய்யவில்லை. தான் பிறந்த ஊர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்து இறைவனடி சேர்ந்துவிட்டார். சிறந்த ஆசானாகவும், சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டு பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தார். அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் நல்ல நிலையில் உலகெங்கும் வாழ்ந்து வருகின்றார்கள். அன்னார் கல்வி துறைக்கு மட்டுமன்றி எமது சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றினார். காளி கோவில் பரிபாலன சபை தலைவராக செயல்பட்டு ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். சமய சொற்பொழிவுகளை மேற்கொண்டு எமது மக்களிடையே ஆன்மீக சிந்தனையை தூண்டினார். இதை விட அவர் பல அளப்பரிய சேவைகளை செய்திருப்பார் என்பதில் ஜயமில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

குப்பிழான்வெப் இணையம்.