எம்மூரின்  பாரி வள்ளல் !

 

 


 


அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்

 

 

எம்மூரின்  பாரிவள்ளல்  பொன்னம்பலம்  ஜெகநாதன்!

எவருக்கும்  உதவிவிடும்  இயல்பினால்  கர்ணன்அவன்!
செம்மண்ணூர்  குப்பிளான்  கற்கரையில்  அருள்சிந்தும்
கற்பகப்  பிள்ளையார்  அடிபரவும்  ஒருதொண்டன்!
முல்லைக்கு  பாரிமன்னன்  தேர்கொடுத்தான்;  ஜெகநாதன்
மனமுவந்து  பிள்ளையார்  கோயிலுக்குத்  தேர்செய்தான்!
எல்லையிலா  அன்புடனே  நீவாழ்வில்  போற்றுகின்ற
இறைவன்உனை  அணைத்தானோ?  எங்கின்று  சென்றாயோ
நேரிலே  பார்த்ததில்லை;  பிறர்மூலம்   உனைஅறிந்தோம்!
நெஞ்சழிந்து   மனைவிமக்கள்   உறவினரும்  நண்பர்களும்
பாரினிலே   கலங்கிநிற்க   வாழ்வுதன்னை  நீத்தனையோ?
பைந்தமிழில்   துயர்தோய்ந்த   அஞ்சலியைப்  பகிர்கின்றோம்!
  

 

கலாநிதி  கணேசலிங்கம்