ஒரு ஆத்ம நண்பனின் கண்ணீர் காவியம்!

 

 


 

 

அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்

 

 

நீ பாப்பா அல்ல வாரி வழங்கும் பாரி – ஜெயா!

கோபுரத்து நாயகனே; குஞ்சு பெற்று எடுத்த கோமகனே;

உறவை விட்டு போனது எங்கே?

ஊரை மறந்து போனது எங்கே?

புளியடி நிழலில், பூவரசம் இலையில் நாயனம் ஊதித் திரிந்த நாட்கள்…

கண்களில் வந்து கண்ணீரில் தொட்டு போகுதே.

ஆச்சி வீட்டு முட்கிழுவையில் அழகான பொன்வண்டு தேடிப்பிடித்தோம்.

பொன்வண்டே பொன்வண்டே எங்கு போனாய்?

தேடுகிறோம் தேடுகிறோம் வான்வரை சென்று…

கண்களில் கண்ணீர் கன்னத்தில் கொட்டுது மழையாய்

எங்கே போனாய் சொல்லடா ஏன்விட்டு போனாய் சொல்லடா.

பாப்பா என்றால் ஊரே அறியும் பாப்பாணவருக்கும் உன்னை பிடிக்கும்

படைச்சசாமிக்கும் படியளந்தாய் கோபுரம் போலே நீ உயர்ந்தாய்.

போனாயோ மகனே! போனாயோ புதுதேசம்தேடிபோனாயோ?

வாடா என்று அழைக்க நண்பன் இல்லையடா.

வாரிக்கொடுக்கும் வள்ளலும் இல்லையடா

மரணம் உன்னை கேட்டதோ?

மரணத்துக்கே உயிர்கொடை கொடுத்தாய்.

பொய்யான மெய்தனை விட்டுத்தானே நீ சென்றாய்.

உன் புகழை மரணம் வெல்லுமா?

உன்ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
உன் பிரிவால் துயர் உறும் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

குப்பிழான் நெற்
ஆக்கம்
சிவப்பிரகாசம்- அப்பன்