யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை மறுதினம். 


 

யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் திங்கட்கிழமை(17-10-2016) பிற்பகல்-02 மணி முதல் பாடசாலை கிருஷ்ணர் அரங்கில் அதிபர் கனகசபை காராளசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. 


இந்த விழாவுக்குத் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுவாமிநாதப்பிள்ளை தேவமனோகரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப்  பொலிஸ் அத்தியட்சகர் தம்பிஐயா கணேசநாதன், யாழ். போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும் தொகுதிச் சிறப்பு வைத்திய நிபுணர் சிவமகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கமநல சேவைகள் திணைக்களக் கணக்காளர் குணலிங்கம் சுரேஷ்குமார் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த விழாவில் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சைவாகம ஜோதி சி. கிருஷ்ணசாமிக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை நிகழ்த்தவுள்ளார். 

இந்த விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. 

செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி.