புன்னகை இதயங்களில் மலர 2015 ஆம் ஆண்டுப் புதுவருட நல் வாழ்த்துக்கள்.பழையன கழித்துப் புதியன புகுத்தும்
புகழ்மிக்க புத்தாண்டே வருக
புத்தாடை புனைந்து
புன்னகை இதயங்களில் மலர
மத்தாப்பு வெடித்து
மாண்புடன் சிறுவரும் பெரியோரும்
இரண்டாயிரத்துப் பதினைந்தை
மனதார உளமார வரவேற்றிடவே வருக.

வெள்ளம் மழையால் வேதனையுறும் நெஞ்சங்களுக்கு
விடிவு கிடைத்திட….
அகதிகளாக….அநாதைகளாக…
அல்லலுறும் எம் மக்கள்
சொந்த ஊரின் சுகம் பெற்று வாழ
அலர்கதிர் ஒளியாய்ப் புத்தாண்டே வருக
ஆனந்த வாழ்வை அள்ளி நீயும் தருக
மலர்ந்திருக்கும் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அதிஷ்டத்தின் திறவு கோலாக….வெற்றியின் வித்தாக… அமைவதோடு உங்கள் எண்ணங்களெல்லாம் இனிதே நிறைவேறிட எங்களுக்கு மேலான சக்தியாக விளங்கும் இறைவன் பூரண நல்லாசி வழங்குவாராக…


என்றும் இனிய இன்முக வாழ்த்துக்களோடு:-

குறிஞ்சிக்கவி செ.ரவிசாந்,(இளங்கவிஞன்,இளம் ஊடகவியலாளர்)
வீரமனை,குப்பிளான்.

 

 

வாழ்க!


இன்னொரு ஆண்டு பிறந்தது இன்று!
எழில்பெறும் காலைப் பொழுதென வாழ்வு
பொன்னொளி கண்டு மலர்ந்திட வேண்டும்!
புழுதியில் துவழா நிலைபெற வேண்டும்!
இன்னலும் பகையும் ஏகிட வேண்டும்!
எழுபகை வீழ்த்திய செந்தமிழ் கடவுளின்
பொன்னடி வேண்டி,இப் புத்தாண் டினிலே
வாழ்த்துகின் றேன்நான்! வாழ்க அனைவரும்!


அன்பன்
க. கணேசலிங்கம்