குப்பிளான் மாதாஜி அம்மாவுக்கு இன்று அகவை 84 (12-11-2015) 


எண்பத்து நான்காம் அகவையில் 

இன்று தடம் பதிக்கும் 

குப்பிளான் மண் பெற்றெடுத்த தவப் புதல்வி

என் வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழும் 

என்  கண்கண்ட ஆத்மகுரு 

தூய துறவறம் காத்த 

ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதி  

விசாலாட்சி மாதாஜி அம்மா  

சிவ யோக சுவாமிகளின் ஆசிபெற்ற 

தவ போதினியாக 

குறைவில்லாது பல நூல்கள் வெளியீடாக்கிய போதும் 

தன்னடக்கம் மாறாமல் திகழும்  

உங்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 

வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம் !

நோய் நொடியின்றி குப்பிளான் மண்ணின் நாயகன் 

எல்லாம் வல்ல சொக்கவளவு 

சோதி விநாயகன் அருளால் 

பல்லாண்டு வாழ்க !வாழ்கவே!!

 

ன்முக  வாழ்த்துக்களுடன்:-

 குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,

 வீரமனை ,குப்பிளான்