எங்கடை சந்தி

 

 

  எங்கடை சந்தி எங்கடை சந்தி
எங்கடை சந்ததி எல்லாம் சந்தித்த சந்தி
சங்கதி பல சொல்லிடும் சந்தி
அம்பனை பஸ் உம் வேம்படி பஸ் உம் போக கூடிடும் சந்தி

அவளும் போக வாடிடும் சந்தி அது எங்கடை சந்தி
மூர்த்தி அப்பா கடை இருந்த எங்கட சந்தி
மூத்த பூதப்பிள்ளையப்பா வடையும் போட்ட எங்க சந்தி
770 எல்லாரையும் ஏத்துது எங்களை ஏனே விட்டு விட்டு போனது

பாத்து போன அண்ணாவி எழுதிப் போட்டார் சந்தி சிரிக்குது
கொட்டகை நிறைந்த காட்சியாய் கேணியடியில் நாடகமும் நடந்தது
எங்கடை சந்தி சந்ததி பல சந்தித்த சந்தி.

குப்பிழான் மார்க்கோணி