வல்லமை தாராய் காளித் தாயே! updated 31-05-2015

 


அகிலமெல்லாம் ஆட்சி செய்கின்ற
அற்புத நாயகியே!
குப்பிளானில் வீற்றிருந்து
அற்புதமாய் அருள்பாலிக்கும் சிவகாம சுந்தரியே!
வரம் வேண்டி உன் வாசல்
வலம் வரும் அடியவரின்;
குறையாவும் போக்கிடுவாய்.

புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடன்
புத்தெழில் பெற்றுக் குடமுழுக்குக் கண்ட
உன் திருவருளை என்னவென்பேன்?
கல்வியறிவில்லாத காளிதாஸரை
மகாகவியாக்கிய காளிகா தேவியே!
சூழும் ஆணவப் பேய்களைத் தூர விரட்டி
துன்பம் எனை அணுகாது காத்;து
உலகக் கவிஞன் என்ற உன்னத இலட்சியத்தை அடைய
எந்நாளும் ஊன்று கோலாயிருப்பாய் அம்மா!

அரசமரத்தைத் தல விருட்சமாகக் கொண்டு
உறையும் ஆனந்த சொருபினியே
உன் அருள் வேண்டித்
துதி செய்தோம்
ஆறாத எம் மக்களின் அவலங்களை ஆற்றி
என் வாழ்வில் எதிர்பாராமல் வரும்
தடைகளை எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற
உனை வந்தனை செய்தே துதி செய்தேன்
வல்லமை தந்து காத்திடுவாய் காளித் தாயே!


கவியாக்கம்:-குறிஞ்சிக்கவி செ.ரவிசாந்,
வீரமனை,குப்பிளான்.
(குப்பிளான் காளியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ சிறப்புக் கவிதை)