Child Collegeஇல் நடைபெற்ற வாணி விழாவில் ரஜந்தன் ஆசிரியரால் வாசிக்கப்பட்ட கவிதை.


கற்றவரும் மற்றவரும் பாமரரும் போற்றும் 
சைல்ட் கல்லூரி வாணிவிழா இன்று
தமிழ் உலக மெங்கும் கல்வித்தாய் சரஸ்வதியை
கொலு ஏற்றி வழிபடும் நாளின்று
எங்கள் கல்லூரியிலும் வாணிவிழா இன்று

மாணவ செல்வங்கள் அள்ளிவழங்கும் கலை நிகழ்ச்சிகள்
பேச்சு,கவிதை, என வளர்ந்து செல்கின்றது.
எங்கள் கிராமத்திற்கு இது புதிதல்ல.
மேடை பல கண்ட மண் எங்கள் மண்
நாடக மேதை பீதாம்பரம் இசைக்கு ஓர்
செல்லத்துரை விஞ்ஞானத் துறையில் உயர்ந்து 
நிற்கும் துரைசாமியோடு அசோகன்
மண்ணின் மைந்தர்களாய் உயர்ந்து நிற்கும்
பேரறிஞர் கூட்டம் மலிந்த எம் மண்ணில்
கவியரங்கை நடத்தும் கவித்தலைவா முதல் வணக்கம்.
உங்களுக்கு உரித்தாகட்டும்.

பெருமைசார் மாணவர்களே பெற்றோர்களே
தாய்க்குலமே தமிழ்த்தாய் வணக்கம் உங்களுக்கு
எங்கள் கல்லூரி ஆசிரியர் கூட்டம் சிந்திய வியர்வையில்
முளைத்த முத்துக்கள் எங்கள் மாணவ செல்வங்கள்
புலமைபரிசில்ன் வெற்றியில் திளைக்கும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

வரலாற்றுத் தலைமைகள் பல கண்ட எம் மண்ணில்
தலைமை என வந்தவர்கள் காட்டுகின்றார் குறட்டு வித்தை
கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம் எழுந்து நிற்போம்
கல்வி வளர பணி செய்வோம்.

சஞ்சலமும் சலசலப்பும் எஞ்சி நிற்கும் காலமிது 
சந்திகளில் நடப்பவற்றை கண்டு மனம் குறுகுறுக்கும்
மிஞ்சிவிட்டால் சண்டை வரும்.
மௌனமாய் இருந்து விட்டால் வாழ்ந்திடலாம்.

காலமெது காலமென காத்திருக்கும் நேரமிது
கன்னியரை தேடி வலைபோடும் பருவமிது
பருவமிதை பக்குவமாய் பேணிவைத்தால்
அவனியிலே நல்லவராய் வாழ்ந்திடலாம்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர்ந்து வாழ்ந்தால்
காதலர் தினத்தில் ரோட்டில் ஏன் இதயம் மிதிபடவேண்டும்.

பாமாலை பூமாலை புகழ்மாலை இனிப்புமாலை
அகம் குளிர வைக்கிறது ஆசிரியர் தின மாலை
நல்லொழுக்கம் பண்பு நிறைந்ததோர் சமூகத்தை
கட்டி எழுப்பிட இளைஞர்களே எழுந்து வாரீர் 

புலம்பெயர் சமூகம் புன்னகை புரியும் காலமிது
புதியதோர் சமூகம் உருவாகும் திட்டம் அவர் போட்ட கணக்கு
கட்டி முடித்தவரும் தட்டி எடுத்தவரும்
கண்மூடித்திரியும் காலமிது
கண்ணியமாய் தொண்டு கருத்தூன்றிச் செய்தால்
எங்கள் சமூகம் உங்களை போற்றும்
அணிதிரண்டு வாரீர் அபிவிருத்தி காண்போம்.

வெள்ளிக்கிழமை இராத்திரி நேரம்
சன்னதி போக துடிக்குது மனது
முருகனை கண்டு தரிசனம் செய்தால்
சஞ்சலம் நீங்கும் நிம்மதி கிடைக்கும்
பிரிந்தவர் உறவு வந்திட கூடும்
இனிமையாய் கேட்ட பக்தி பாடல்கள்
வல்லைவெளியில் காதுக்கு இனித்தது
ஆலய வாசலில் கைகூப்பி நின்றேன்
நோக்கியா அழைத்தது குத்தடி குத்தடி சைலக்கா என்று
என்ன செய்வது காலத்தின் கொடுமையால்
நிம்மதி குலைந்தது தரிசனம் தொலைந்தது

சன்னதி வாசலை நோக்கியா மறைத்ததென்றால்
காதலர் உறவை பேஸ்புக் என்ன செய்யும்
கன்னிப்பெண்கள் மெத்தக்கவனம் 
பேஸ்புக் காதல் வாழ்வை கெடுக்கும்

வாணிவிழா கவியரங்கில் வேண்டுகின்றேன் வரங்கள் பல
முத்தான ஆசை வந்து முந்தியவர் கதை எனக்கு சொல்ல வேண்டும்
பாய்விரித்து படுக்கையிலே விழிமூடி தூங்கிவிட்டேன்
கனவிலே ஒருத்தி மணவறையில் அருகமர்ந்திருக்க
திருமணசடங்கை ஒழுங்காய்கண்டு தாலிகட்டும் நேரம்
அவள் கழுத்தோடு என் கைசேர கண் விழித்துவிட்டேன்
விடியும் வரை உறக்கமில்லை

அவள் நினைவில் துடித்தேன் எழுந்தேன் அம்மா என்றேன்
கண்ட கனவை மெல்ல சொன்னேன்
அம்மா கேட்டாள் சின்னப்பிள்ளை என்றாள்
வயது 25 என்றேன்.
பொறுப்புண்டு பொறுமையாய் இரு தம்பி என்றார்
கண்ட கல்யாண கனவு கூட இனிக்கவில்லை
பொறுப்புக்ள் சுமையாய் இருப்பதனால்.

புயலில் அடிபட்டு முறிந்த மரக்கிளையொன்று
மறுபடியும் ஆசைப்படுகிறது மரத்துடன் சேர
அம்மாக்குத் தெரியும் அப்பாக்கும் தெரியும்
நாளை நீ எனக்கு மாப்பிள்ளை என்று
தெரியா பருவத்தில் காதலித்தது தப்பு
கனடா மாப்பிள்ளை எனக்கு இப்போ பரிசு
காதல் முறிந்தது கனடா மாப்பிள்ளை மறுதாராம் என்று தெரிந்தது
முறிந்த மரக்கிளையொன்று ஆசைப்படுகிறது மரத்துடன் சேர

ஆசை ஆசையாய் இருக்கு ஆசிரியர் ஆகவே விருப்பு
மீசை வைத்திட ஆசை எனக்கு ரோசம் இல்லையே அதற்கு
கன்னியர் பின்னால் சுற்றிட ஆசை
கடமைகள் வந்து தடுக்குது இப்போ!
வெளிநாடு பறந்திட ஆசை
கலியாணம் செய்ய யாரும் இல்லை இப்போ
தப்புக்கணக்கு எனக்கு வேண்டாம்
தருகின்ற சீதனம் நிறைவாக வேண்டும்
கொடுமை கொடுமையாய் இருக்கு சீதனக் கொடுமையில் வாடிடும் மஙகையரை நினைத்திட துடிக்குது மனது

வீதிக்கு வீதி வேட்பாளர் நோட்டீஸ்
நடந்து முடிந்தது மாகாணசபை கூத்து
தடியடி பொல்லடி இல்லை
அமைச்சர் பதவியில் மட்டும் ஏன் இந்த மோகம்
ஒன்றுபட்டவர் திரண்டு எழுந்தனர்
வந்து குவிந்தன வெற்றிகள்
விடிவு வருமென காத்திருந்தனர்
விம்மி அழுகிறார் வேடிக்கை என நினைத்து

வளரும் கலையுலகில் வளமான
கவி எழுத கற்பனையில் நான் மிதந்து
கன்னியரை வரவழைத்து காளையரை சேர்த்து அழைத்து பொல்லாத உலகினில் புதுமை பல படைத்திடும்
புதுமைக்கவிஞனாய் நான் வளர அவை வாழ்த்திட வேண்டும் எனக்கூறி முடிக்கின்றேன்
என்கவியை.