விடை தெரியாத வினாக்கள்

இரண்டு குள்ள நரிகள்
சேர்ந்து ஒப்பந்தமாம்
தீவிர வாதத்தை ஒழிக்கவென்று....
உரிமைக்காக
உயிரை கொடுத்து
போராடிய எம்மை
தீவிரவாதிகள் என்று
முத்திரை குற்றின்னீர்கள்...
அப்படி பட்ட நீங்கள்..
எப்படி ஒழிப்பீர்கள்...
உலக தீவிரவாதத்தை...
உங்கள்
நாற்காலியை
நிலை நிறுந்தி கொள்ளவே...
உங்களுக்கு போராடவேண்டியிருக்கும்...
பிறகு எப்படி
எப்படி ஒழிப்பீர்கள்...
உலக தீவிரவாதத்தை....
லஞ்சம் கொடுத்த
தீவிரவாதியை விட்டு விட்டு
ஏமாளியை
சிறையில் அடைப்பது
நீங்கள் தானே...
அப்படி பட்ட நீங்கள் எப்படி
எப்படி ஒழிப்பீர்கள்...
உலக தீவிரவாதத்தை.......
சுகந்திர தேசமாம்
இந்தியா  ஆனால்
இன்னும் போராடி கொண்டு....
தன்னுடைய
 நாட்டின் தீவிரவாதத்தை
ஒளிக்க முடியாத
இந்தியாவால் எப்படி
உலக தீவிரவாதத்தை.....
ஒழிக்க முடியும்...
நேர்மைக்கு முன்பு
பணம் பேசும் நாட்டில்
எப்படி தீவிரவாதம் ஒழியும்
எப்படி ஒழிக்க முடியும்...
தீவிரவாதிகளுடன்
கூட்டு சேர்ந்து அப்பாவி
மக்களையும்
தனது அடக்குமுறையால்
தீவிரவாதத்தை கையில்
எடுக்க வைக்க தான் முடியும்..
இந்தியாவால்......
இலங்கை பயங்கரவாத
அரசோடு சேர்ந்து
அப்பாவி தழிழர்
உயிரை பறிக்கும்...
இலங்கை அரசின் கைக்கூலியான
இந்தியாவா
உலக பயங்காரவாதத்தை
 அழிக்க போகின்றது.....
ஒப்பந்தமாம்
தீவிரவாத்தை ஒழிக்க......
அரசியல் என்ற போர்வைக்குள்
இருக்கும் தீவிரவாதிகளிடமா
இல்லை
இரக்கமற்ற நாட்டிடாமா...
உலக தீவிரவாதத்தை..........
ஒழிக்க போடுவது
ஒப்பந்தம்.....
காந்தி தேசத்திலே...
 நீதி தான்  நீ இல்லையே  


உன் நினைவில் நான்

நித்தமும் யுத்தம் செய்கின்றாய்
என் இதயத்தில் இருந்து நீ...
என்னுடைய தலையனையை
கேட்டுப்பார்த்தால்
என் கண்ணீர் கதையை
அது சொல்லும்..
நீ இருப்பது தொலைவில் தான்
ஆனால் என் இதயம்
மட்டும் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கின்றது...
உன் இதயத்தில் நான் இருப்பேன் என்ற
நம்பிக்கையில்...
நான் நிலை தடுமாறு பொழுதெல்லாம்..
உன் நினைவினில் நான் தான் கலத்திருபேன்
என்று சொல்கின்றது என் இதயம்
எனக்கே ஆறுதலாய்...

ஒவ்வொரு நிமிடமும்
உனக்காய் விழித்திருந்து
உன்னை காணத பொழுதுகளில்
இதயம் துடிக்க மறுக்குமே
கண்கள் முட மறுக்குமே..
நீ அறிவாய்..
நீ என்னோடு இருப்பதனால் தான்
என்னால் சிரிக்கமுடிகின்றது..
உன்னை தவிர எனக்கு
கனவுகள் இல்லை
உன்னை தவிர நான் எதையும்
உயர்வாய் நினைப்பதுவும் இல்லை
வரமாய் கேட்பதுவும் இல்லை...
ஒவ்வொரு நொடியும்
உன்னை எதிர்பார்க்கும்
என் இதயம்
நீவருவாய் என்ற நம்பிக்கையில்..!                 உன் இதயத்தில் ஒர் இடம் வேண்டும்

உன்னை விடை கொடுத்து
பிரிய போகும்...
நிமிடங்களில் தான் நான் அறிந்தேன்
பிரிவின் வலியை...
விடை கொடுக்க மனம் இன்றி
உன் இதயத்துடன் போராட்டம்
நடத்தி கொண்டிருக்கின்றேன்..
உன்னை நான் பிரியவா இல்லை
உயிரை நான் பிரியவா...
இரண்டு வினாக்களுக்கும்
மத்தியில் என் பயணம்
நீ அறிவாயா நீ....
அப்படி என்ன
நீ அழகாய் தான் இருப்பாயா...
இல்லையே....
அப்படி என்றால் இதுவரை நீ அன்பாய் தான்
பேசியிருப்பாயா... இல்லையே..
இருந்தும் உன்னை தான் என் மனம்
தொடர விரும்புகின்றது..
தனிமையில் உன் நினைவுகளுடன் தான்
வாழ்கின்றேன்..
நீ என் பக்கம் திரும்புவாய்
என்ற நம்பிக்கையுன்...
உன் இதயத்தில் நான் இல்லையா...
உன் வார்த்தையால் என்னை கொள்ளாதே...
உன்னிடம் பேசிட ஆசைகள்
கோடிதான் இருந்தும்
முடிவதில்லை... உன்னுடன்
பேசிவிட....
 நீ சினுங்குகின்றாய்..
சிறுபிள்ளை போல்
உன் சினுகள்களில் நான்
உனக்குள் சிறையாகி போகின்றேன்..
உன் இதயத்தில் ஓர் இடம் வேண்டும்
எனக்காக... தருவாயா...      


உன் நினைவில்....

உன் நினைவுகளுடன் தான்
நான் கலந்து போகின்றேன்..
ஒவ்வொரு நொடியும்
தொலைந்து போகின்றேன்
உனக்குள்.....

நீ எப்படியிருப்பாய் என்னை போல்
காற்றுடன் கவிபடிப்பவனாய் இருப்பாயா...
கூவும் குயில் போல்
வார்த்தையால் இதயத்தை
உன் வசமாக்குபவனாய்
இருப்பாயா....
என் கனவுக்குள் வந்து
மனதுக்குள் புகுந்தவனே...
நீ எப்படியிருப்பாய்....
நீ பேசினால் அத்தனை வார்த்தைகளும்
என் இதயத்தில் தேன் போல்
இனிமையாய் இருக்குமா....
என் இதயத்தை புரிந்து கொண்டவனாய்
இருப்பாயா.... இல்லை
புரிந்தும் புரியாதது போல்
என்னை தவிக்க
வைத்து பார்ப்பவனாய் இருப்பாயா...
என் சிணுங்கள்களை
ரசிப்பவனாய் இருப்பாயா...
இல்லை
அழவைத்து என்னை
வேடிக்கை பார்ப்பவனாய் இருப்பாயா...
உன் பெயரை தவிர
நான் எதுவும் அறியவில்லை
நீ எப்படியிருப்பாய்....
என் வார்த்தைகள்
இதயத்தை காயப்படுத்தியதில்லை
என்னை போல்
நீயும் புன்னகையை மட்டும்
உதிர்ப்பவனாய் இருப்பாயா...

உன்னை பற்றி சிந்திப்பதை
தவிர என்னால் எதையும்
சிந்திக்க முடியவில்லை..
என்னை பற்றிய சிந்தனைகள் உனக்குள்
இருக்குமா என்பதறியாமலே..
உனக்குள் நான் தொலைந்து
போனேன்
உன் நினைவில் தினமும்
மரணித்து கொண்டிருக்கின்றேன்..
நீ இன்றி போனால்
எனக்கு வாழ்க்கை இல்லை
நீ பிரிகின்ற அந்த நொடி
நான் மடிந்து தான் போவேன்.
எனக்கு மலர் மாலை தராவிட்டாலும்
உன் கைகளால்
மலர் வளையம் தந்து விடு..