இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டே இன்பங்கள் கொண்டு வாராய் ...!(வாழ்த்துக் கவிதை)

 


நல்லாட்சியை மலரச் செய்த இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டே 
நமக்கான தீர்வினை உன்னிடம் பெற முடியவில்லை 
எத்தனையோ ஏக்கங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் 
இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டே -உன்னை 
இருகரம் கூப்பி வரவேற்கிறோம் 

காலைக் கதிரவன் கிழக்கு வானில் 
பொற்கரம் நீட்டிட 
ஆலய மணியோசை உன்னை 
ஆராதனை பாடி வரவேற்க 
ஒன்றே குலமாய் நன்றே செய்து 
நானிலத்தில் அனைவரது வாழ்விலும் 
எல்லா நாளும் இன்பங்கள் சூழ  ....
குப்பிளான் மண் மக்கள் அனைவரும் 
குறைவில்லாது செல்வங்கள் பெற்று நீடுழி வாழ 
என் உளங் கனிந்த ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றென்றும் .

 


கவியாக்கம்:-புலவர் மணி குப்பிளான் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் .